ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251

பொதுநலவாய உச்சி மாநாடு:

கனடா பகி~;கரிக்க கூடாது

முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரோனி பிரதமர் ஸ்டீபன்
ஹார்பருக்கு அழுத்தம்

மாநாட்டைப் புறக்கணித்தால் 146 வருட ஜனநாயகப் பண்புகளை பகிர்ந்து கொள்வது எவ்வாறு?

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை கனடா பகிஷ்கரிக்கக் கூடாதென கனேடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி வலியுறுத்தியுள்ளார்.பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்புரிமை நாடுகளின் அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகளில் திருப்தி காணவில்லை என்பதற்காக உச்சி மாநாட்டை பகிஷ்கரிப்பதன் மூலம் இறுதியில் பொதுநலவாயத்தில் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்துவதற்கு கூட போதுமானளவு உறுப்பினர்கள் இருக்க மாட்டார்களெனவும் அவர் கூட்டிக் ¡ட்டியுள்ளார்.

விவரம்

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை தலைவர் கைது

பஸ் நடத்துனர் சாரதியை தாக்கியதாக குற்றச்சாட்டு

ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபைத் தலைவர் ஜகத் பெரேரா நேற்று பொலிஸில் சரணடைந்ததாக பொலிஸ் தலைமையகம் கூறியது. சிலாபம் - கொழும்பு அதி சொகுசு பஸ் ஒன்றின் சாரதியையும் நடத்துநர்கள் இருவரையும் தாக்கிய சம்பவம் தொடர்பில் . . . .


இறக்குவானையில் சிவப்பு மழை

பஸ் டிக்கட் பரிசோதகர்கள் பஸ்ஸில் ஏறியதும், பஸ் நடத்துனர் டிக்கட்டுகள் பலவற்றை கிழித்து வாயில் போட்டுக் கொண்டு, டிக்கட் புத்தகத்தையும் எறிந்து விட்டு, தப்பியோடிய சம்பவம் மகியங்கனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விஞ்ஞான, தொழில் நுட்பத்தை முன்னேற்றி பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளோம்

நெனோ தொழில்நுட்பம் விவசாயத் துறைக்கு கிடைத்த வரம் எமக்கானதை நாமே உற்பத்தி செய்யும் யுகமிது - ஜனாதிபதி

அரசாங்கம் வெறுமனே அபிவிரு த்தியை மட்டுமன்றி நாட்டு மக்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான பின்புலத்தையும் உருவாக்கியுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்த யுகத்தை மாற்றி எமக்கானதை நாமே உற்பத்தி செய்யும் யுகமொன்றை நாட்டில் உருவாக்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவரம்

மாகம்புர துறைமுகம் 460 மில்லியன் வருமானம்

23000 வாகனங்கள் இறக்குமதி

ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் இதுவரை 460 மில்லியன் ரூபா வருமானம் பெறப் பட்டுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்துக்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம் 2012 ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் முதலாம் கட்டத்தில் 130 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப் பட்டது. ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் 55000 க்கும் அதிகமான வாகனங்கள் இறக்கப்பட்டதுடன் இந்த வாகனங்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

விவரம்


 

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 27ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. அதன் அழகிய தோற்றத்தையே இங்கு காண்கிaர்கள்.
(படம்: குமாரசிறி பிரசாத் -
விமான நிலைய நிருபர்)

ஐ. தே. க. தலைமைத்துவ சபை;பேச்சுவார்த்தை தோல்வி

* சஜித் நேற்று வரவில்லை

* ரணில் சார்பில் 12 யோசனைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையை ஸ்தாபிப்பதற்காக நேற்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தைக்கு சஜித் பிரேமதாச சமுகமளிக்காததையிட்டே இது தோல்வியில் முடிவடைந்ததாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன.ஐ.தே. க. வின் தலைமைத்துவ சபையை ஸ்தாபிப்பது தொடர்பாக தேசிய பிக்கு முன்னணி முன்வைத்திருந்த 07 யோசனைகளுக்கும் மேலதிகமாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிதாக 12 யோசனைகளை அதனுடன் இணைத்துக்கொண்டுள்ளார்.

விவரம் 

ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெனோ தொழில்நுட்பப் பூங்காவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்.
(படம்: சுதத் சில்வா)


விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறைக்கு இடையில் நெருங்கிய
தொடர்பு இருப்பதன் காரணமாக விளையாட்டினை விருத்தி செய்வதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு சக்தியைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ