ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

போயிங் நிறுவனத்தின் 747 வகை விமான உற்பத்தி குறைப்பு

போயிங் நிறுவனத்தின் 747 வகை விமான உற்பத்தி குறைப்பு

அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தைத்தலைமையகமாகக் கொண்டு இயங்கும் போயிங் நிறுவனம் விமான உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனமாகும், இதன் தயாரிப்புகளில் கடந்த 1970 முதல் பிரபலமாக இருப்பது இரட்டை அடுக்கு 747 விமானம் ஆகும்.

ஆனால், சீரமைக்கப்பட்டு 2011ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 747-8 விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இவற்றில் முன்பதிவு செய்யப்பட் டவைகளில் பாதி சரக்கு விமானங்கள் ஆகும். அவற்றிலும் போயிங் நிறுவனம் எதிர்பார்த்த அளவு பதிவு கிடைக்கவில்லை.

மற்றொரு விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் தயாரிப்பான ஏ-380, இந்த வகை விமானத்திற்கு கடும் போட்டியைத் தருகின்றது. அதுமட்டுமன்றி போயிங்கின் மற்றொரு பிரிவான 777 வகை விமானத்திற்கும் போட்டியைத் தருகின்றது.

இதன் தேவைகள் குறைவதை முன்னிட்டு அடுத்த ஆண்டு முதல் வருடத்திற்கு 18 விமானங்களே உற்பத்தி செய்யப்போவதாக கடந்த வெள்ளிக் கிழமை அன்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்டிற்கு 24 விமானங்கள் உற்பத்தி என்று திட்டமிடப்பட்டிருந்ததில் தற்போது 21தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு இது மேலும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனைக் குறைவு தங்களது தரத்தையோ, உறுதிப்பாட்டையோ மாற்றாது என்று போயிங் நிறுவனத்தின் துணைத் தலைவரும், பொது மேலாளருமான எரிக் லின்ட்பிளட் தெரிவித்துள்ளார். சரக்கு விமான சந்தையில் நீண்ட கால சராசரி வளர்ச்சி மீண்டும் 2014ம் ஆண்டில் தொடங் கக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி