ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

அமெரிக்க கப்பலின் பொறியியலாளர் மீண்டும் தற்கொலை முயற்சி

அமெரிக்க கப்பலின் பொறியியலாளர் மீண்டும் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கப்பலின் தலைமை பொறியியலாளர் நேற்று மீண்டும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை 5.30 மணிக்கு தலைமை பொறியியலாளர் வாலொரி தனது சேட்டை கழற்றி கழுத்தில் இறுக்கமாக கட்டி அங்கிருந்த கம்பியில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த சக ஊழியர்கள் கூச்சல் போடவே ரோந்து பணியில் இருந்த சிறைக் காவலர்கள் ஓடி வந்து வாலொரியை மீட்டு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டொக்டர் கப்பலிலும், சிறையிலும் பொறியியலாளர் அடைக்கப்பட்டதால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட 35 பேரில் போல்டவர்ஸ் வில்லியம் இர்விங், நிக்கோலஸ் சிம்சன், ரேமண்ட் டின்டால், நிக் டன், ஜோன் ஆர்மஸ்ட்ராங் ஆகியோர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை சந்திக்க சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரக அதிகாரிகள் இருவர் நேற்று சிறைக்கு வருகை தர முயற்சி மேற்கொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி