ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

தங்க புதையல் வேட்டைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தங்க புதையல் வேட்டைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உ.பி. மாநிலம் உன்னாவ் பகுதியில் தங்கப் புதையல் தேடும் பணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

உன்னாவ் பகுதியில் இருக்கும் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் கோட்டையில் 1000 தொன் தங்கம் இருப்பதாக கனவு கண்டதாக ஷோபன் சாகார் என்ற சாது ஒருவர் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 1000 தொன் தங்கத்தைத் தேடும் வேட்டை நடந்து வருகிறது. இந்தப் பணியில், இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் உத்தரப் பிரதேச மாநில அலுவலகக் குழுவும் இவர்களுக்கு உதவியாக தேசிய புவியியல் ஆய்வகத்தின் ஒரு குழுவும் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அகழ்வாய்வை நிறுத்தக் கோரியும் முறைப்படுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உ.பி. அரசின் தங்கப் புதையல் தேடலில் தாங்கள் தலையிட முடியாது என்றும் அகழ்வாய்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி