ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

அமெரிக்க கப்பலில் திண்டுக்கல் வாலிபர்

அமெரிக்க கப்பலில் திண்டுக்கல் வாலிபர்

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலில் இருந்து கைதான திண்டுக்கல் வாலிபர் குறித்து கியூ பிரிவு பொலிஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கியூ பிரிவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கப்பல் கப்டன் உட்பட 35 பேரை கைது செய்தனர். இவர்களில் 12 பேர் இந்தியர்கள். இதில் ஒருவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்.

இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜுன் 16ம் திகதி முதல் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார்.

அடிக்கடி கப்பல் கம்பெனியில் இருந்து வேலைக்கு கைத்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பர். ஒரு தடவை வேலைக்கு சென்றால் 500 டொலர் வரை சம்பளம் கிடைக்குமாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி