ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

தேர்தல் செயற்பாடுகளை இராணுவத்தினர் குழப்புவதாக கூறப்படுவதில் உண்மையில்லை

தேர்தல்கள் ஆணையாளர் நேற்று வவுனியா விஜயம்

தேர்தல் செயற்பாடுகளை இராணுவத்தினர் குழப்புவதாக கூறப்படுவதில் உண்மையில்லை

வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று வவுனியா தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார். வவுனியாவில் தேர்தல் பிரச்சினைகள் தொடர்பில் உதவித் தேர்தல் ஆணையாளரிடம் கேட்ட றிந்து கொண்ட அவர், வவுனியா மாவட்டத்தில் தேர்தல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடி யிருந்தார்.இதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் :-

சுதந்திரமானதும் நீதியானது மான தேர்தல் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை. அவ்வாறு நடைபெறுவதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இராணுவம் தேர்தல் செயற்பாடுகளை குழப்புவதாக தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை.

அவ்வாறான முறைப்பாடுகள் சிவில் அமைப்புகளிடம் இருந்து இதுவரை கிடைக்கவில்லை. எனவே, ஆதாரமற்ற அவ்வாறான முறைப்பாடுகள் போலியானவையாக வுள்ளது.

இதேவேளை தேர்தல் வன்முறைகள் சம்பவம் தொடர்பாக பொலிஸில் பாரிய முறைப்பாடுகள் கிடைக்கவில்லை. அபேட்சகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள போதிலும் அவை தொடர்பில் விசாரணை நடத்துமளவிற்கு பாரியளவில் அவை இல்லை.

எனினும் பொலிஸார், வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்பதில் அவதானமாக உள்ளனர். அபேட்சகர்கள் எவரும் தேர் தல் சட்டதிட்டங்களுக்கு அமைவாக எங்கும் சென்று தனது பிரசார செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி