ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

ரோஸி சேனாநாயக்க சார்பில் சார்பில் அஸ்வர் கேள்வி எழுப்பியதால் சர்ச்சை

ரோஸி சேனாநாயக்க சார்பில் சார்பில் அஸ்வர் கேள்வி எழுப்பியதால் சர்ச்சை

* எதிர்க்கட்சி தலைவர் ரணில் ஒழுங்குப் பிரச்சினை

* சபையில் சூடான வாதப்பிரதிவாதம்

* கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவுகாண இணக்கம்

ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க பாராளுமன்றத் திற்கு வருகை தராததால் அவர் சார் பாக வாய் மூல விடைக்கான கேள் வியை ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் எழுப் பியதால் நேற்று சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

ரோஸி சேனாநாயக்க சார்பாக அந்தக் கேள்வியை வினவ முடியாது என எதிர்த்தரப்பு பிரதம கொரடா ஜோன் அமரதுங்க அறிவித்ததையடுத்து. ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. அந்த கேள்வியை எழுப்பினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஆளும்தரப்பு எதிர்த்தரப்பு எம். பிக்களிடையே சூடான வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது.

கொரிய மொழிப்பயிற்சி தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலனோம்புகை அமைச்சர் டிலான் பெரேராவிடம் ரோஸி சேனாநாயக்க எழுப்பியிருந்த கேள்வி ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை. அவர் சார்பாக யாராவது அந்தக் கேள்வியைக் கேட்கிaர்களா என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி வினவினார்.

தான் அந்தக் கேள்வியைக் கேட்கப் போவதில்லை என எதிர்த்தரப்பு பிரதமகொரடா ஜோன் அமரதுங்க தெரிவித்தார். இதனையடுத்து, ஏ. எச்.எம். அஸ்வர் எம். பி. குறித்த கேள்வியை எழுப்பினார். இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிலையியற் கட்டளைப்படி இடையீட்டு கேள்வியையே ஏனைய கட்சி எம். பி. ஒருவராலும் கேட்க முடியும். இந்த விடயம் குறித்து கட்சித் தலைவர் கூட்டத்திலே முடிவு செய்ய வேண்டும் என்றார்.

அமைச்சர் டிலான் பெரேரா கூறியதாவது:- ஒரு எம். பி. வாய்மூல விடைக்கான கேள்வியை கேட்காவிட்டால், வேறு ஒரு எம். பி. அவர் சார்பாக கேள்வியை வினவுவார். ஆனால் பாராளுமன்ற வரலாற்றில் ஒருபோதும் எதிர்க்கட்சி எம். பி. ஒருவரின் கேள்வியை அதே கட்சி பிரதம கோரடா வினவ முடியாது என நிராகரித்தது கிடையாது. எதிர்க்கட்சித் தலைவரும் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். ஆனால் ஒரு எம். பி. யின் உரிமையைப் பாதுகாக்கவே எமது தரப்பு எம். பி. குறித்த கேள்வியைக் கேட்டார். ஒரு எம். பியின் உரிமையை பாதுகாக்க வேறு ஒரு எம். பி. க்கு ஆஜராக இடமளிக்க வேண்டும். எதிர்க்கட்சியிலுள்ள பிளவினால் எம். பி. க்களின் உரிமையைத் தடுக்க முடியாது என்றார்.

ஏ. எச். எம். அஸ்வர் எம். பி.

பிரிட்டிஷ் பாராளுமன்ற நடைமுறைப்படி இங்கு ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுகிறது. பாராளுமன்றத்தில் ஒரு எம். பி. கேட்க இருந்த கேள்வி அவர் வராதபட்சத்தில் வேறு எம்.பி. யினால் கேட்க முடியும். அதனாலே, நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன் என்றார்.

பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி கூறியதாவது:-

பாராளுமன்ற சம்பிரதாயப்படி ஒரு எம். பி. வராவிடின் யாராவது ஒரு எம். பி. க்கு அந்தக் கேள்வியைக் கேட்க இடமளிக்கப்பட்டது. இது தொடர்பில் ஏதும் முடிவு எடுப்பதானால் கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யலாம் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி