ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

ஹாஜிகளுக்கு சிறந்த சேவை வழங்கத் தவறினால் ஹஜ் முகவர்கள் மீது நடவடிக்கை

ஹாஜிகளுக்கு சிறந்த சேவை வழங்கத் தவறினால் ஹஜ் முகவர்கள் மீது நடவடிக்கை

இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ்ஜாஜிகளுக்கு சிறப்பான முறையில் சேவை வழங்கத் தவறும் ஹஜ் முகவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச ஹஜ் குழுவின் இணைத் தலைவரும், சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத் தக்க சக்திப் பிரதியமைச்சருமான ஏ. ஆர். எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்ப தாவது :- ஹஜ்ஜாஜிகளுக்கு சிறப்பான முறையில் சேவை வழங்கத் தவறும் ஹஜ் முகவர் நிலையங்களின் லைசன்ஸை இரத்துச் செய்ய அரச ஹஜ் குழு நடவடிக்கை எடுக்கும். இதில் தயவுதாட்சண்யம் காட்டப்படமாட்டது.

ஹஜ் விவகாரத்திற்குப் பொறுப்பாக அரசாங்கம் தனியொருவரை நியமிக்கவில்லை. இதற்கென குழுவொன்றே அமைக்கப்பட்டிருக்கின்றது. அக் குழுவுக்கு இணைத் தலைவர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நானும் ஒருவன், அதனால் ஹஜ் விவகாரம் தொடர்பான தீர்மானங்களையும் முடிவுகளையும் எவரும் தனித்து எடுக்க முடியாது. ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் போது ஹரம் ஷரீபில் தொழுவது மிகவும் அவசியம். தூர இடங்களில் ஹாஜிகள் தங்க வைக்கப்பட்டால் ஹரம் ஷரீபில் தொழ இடம் கிடைக்காது.

இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். அதனால் ஹஜ் யாத்திரைக்கான கட்டணத்தை வரையறுப்பது உகந்ததல்ல. அரச ஹஜ் குழு ஹஜ் யாத்திரைக் கட்டணம் குறித்து கூடி முடிவுகள் எதனையுமே எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி