ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

கராட்டி போட்டியில் சம்பியன்

கராட்டி போட்டியில் சம்பியன்

அக்கரைப்பற்று தேசிய கல்லூரி மாணவனும், ஜப்பான் கராட்டி தோ மருயோசிக்காய் சங்கத்தின் மாணவனுமாகிய எஸ். ஏ. சர்ராஜ் முஹமட் 6வது, தேசிய சேடோக்கன் கராட்டி சுற்றுப் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், குமித்தே போட்டியில் பங்குபற்றி 2ம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத் தையும் பெற்றுக் கொண்டார்.

14 – 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட 3 – 1 கியு இடையிலான போட்டியில அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மாணவன் ஒருவன் வெற்றி பெற்றிருப்பது பாடசாலைக்குப் பெரும் நன்மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது என்று பாடசாலை சமூகம் பெருமையடைகின்றது. இப்போட்டிகள் அண்மையில் சுகததாச உள்ளரங்கில் நடை பெற்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி