ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

ஆபிரிக்க உதைபந்தாட்ட போட்டி;  மூன்றாவது முறையாக நைஜீரியா சம்பியன்

ஆபிரிக்க உதைபந்தாட்ட போட்டி;  மூன்றாவது முறையாக நைஜீரியா சம்பியன்

ஆபிரிக்க நாடுகள் கலந்துகொண்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம், தென் ஆபிரிக்க தலைநகர் ஜொகனெஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் இரண்டு முறை சம்பியன் பட்டம் வென்ற நைஜீரியா அணி, பாகினா பாசோ நாட்டை சந்தித்தது.

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கபட்ட இந்த ஆட்டத்தில் நைஜீரியா 1-0 என்ற கோல் கணக்கில் பாகினா பாசோவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் நைஜீரியா மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி