வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

பங்களாதேஷ¤க்கு எதிரான 2வது கிரிக்கட்: சச்சின் ராவிட் சிறப்பாக ஆட்டம்

பங்களாதேஷ¤க்கு எதிரான 2வது கிரிக்கட்: சச்சின் ராவிட் சிறப்பாக ஆட்டம்

வங்கதேசத்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்டில் சச்சின், திராவிட்டின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 226 ஓட்டங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மிர்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 233 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

2ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 459 ஓட்டங்கள் எடுத்தது. விக்கெட் இழப் பின்றி 69 ஓட்டங்களுடன் 2ம் நாள் ஆட்டத்தை இந்தியா திங்கட்கிழமை தொடர்ந்தது.

ஆட்டத்தின் 3வது ஓவரில் தனது அரை சதத்தை செவாக் பூர்த்தி செய்தார். எனினும் 63 பந்துகளில் 8 பெண்டரிகளுடன்56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷாதத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் கம்பீர் பெளண்டரிகளாக விளாசத் தொடங்கினார். டெஸ்டுகளில் தனது 11வது அரை சதத்தைப் பூர்த்தி செய்த அவர், 83 பந்துகளில் 9 பெளண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்து ஷபியுல் இஸ்லாம் பந்துவீச்சில் வெளியேறினார்.

அதன் பின்னர் இணைந்த ஜாம்பவான்களான சச்சின் திராவிட் ஆகியோர் தொடக்கத்தில் பொறுமையாக விளையாடினர். சச்சின் 27 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ருபேல் ஹ¤சைன் வீச்சில் கொடுத்த கேட்சையும், 50 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஷாதத் வீச்சில் கொடுத்த கேட்சையும் ரகிபுல்ஹசன் கோட்டை விட்டார்.

திராவிட் 9 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டிலிருந்து தப்பினார். உணவு இடை வேளைக்கு முன் திராவிட் 28 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ருபேல் ஹ¤சைன் வீச்சில் கொடுத்த கேட்சை ஜுனைத் சித்திக் பிடித்தார். எனினும் நடுவர் நோபோல் என அறிவிக்க திராவிட் தப்பிப் பிழைத்தார். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 22 ஓட்டங்கள் சேர்த்தனர்.

திராவிட் 188 பந்துகளில் 12 பெண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷாதத் ஹ¤சைனின் பென்சரில் தாடையில் காயமடைந்து களத்தை விட்டு வெளியேறினார். அபாரமாக விளையாடி டெஸ்டுகளில் தனது 45 வது சதத்தைப் பூர்த்தி செய்த சச்சின் 182 பந்துகளில ஒரு சிக்சர், 13 பெளண்டரிகளுடன் 143 ஓட்டங்கள் எடுத்து ஷகிப் அல்ஹசனின் பந்து வீச்சில் இம்ருல் கயேஸிடம் பிடிபட்டார்.

திராவிட் வெளியேறிய பின் களம் இறங்கிய முரளி விஜய் 49 பந்துகளில் மூன்று பெளண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் எடுத்தார். ஷகிப் அல் ஹசன் வீச்சில் மஹ்மதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் தோனி 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். ஹர்பஜன் 13 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 2ம் நாளில் மட்டும் இந்தியா 89.5 ஓவர்களில் 390 ஓட்டங்கள் குவித்தது.

3ம் நாளில் 300 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றிகூட வசமாகலாம்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •