வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

பூனா நகரில் முதியோருக்கான  சர்வதேச மெய்வல்லுநர் விளையாட்டு விழா

பூனா நகரில் முதியோருக்கான  சர்வதேச மெய்வல்லுநர் விளையாட்டு விழா

இலங்கை சார்பில் 30 பேர் பங்கேற்பு

இம்மாதம் இறுதியில் இந்தியாவின் மஹராஷ்டிர பிராந்திய பூனா நகரில் முதன் முறையாக நடைபெறும் முதியோர்களுக்கான சர்வதேச மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் இலங்கையின் சார்பில் 30 வீர வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

இந்திய முதியோர் மெய்வல்லுநர் சங்கம் ஏற்பாடு செய்யும் இவ்விழாவில் 16 நாடுகளைச் சேர்ந்த 1500க்கும் மேலான மெய்வல்லுநர் போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

30 வயது முதல் 80 வயதிற்குட்பட் டோர்களுக்காக 11 பிரிவுகளில் விஷேட போட்டிகள் இதன்போது இடம்பெறுவதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அறிவிக்கின்றது. (து)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •