வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

உலகக் கோப்பை ஹொக்கிப் போட்டியில்  இந்தியா பங்கேற்க முடியும்

உலகக் கோப்பை ஹொக்கிப் போட்டியில்  இந்தியா பங்கேற்க முடியும்

உலகக் கோப்பை ஹொக்கி போட்டியில் இந்தியா பங்கேற்பதில் பிரச்சினை ஏதும் இருக்காது என்று சர்வதேச ஹொக்கி சம்மேளனம் கூறியுள்ளது. இந்தியா ஹொக்கி சங்கத் தேர்தலை நடத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் உலகக் கோப்பை ஹொக்கியில் இந்தியா பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் சர்வதேச ஹொக்கி சம்மேளன தகவல் பிரிவு மேலாளர் அர்ஜென்மெய்ஜர் இது குறித்து நேற்று முன்தினம் கூறியதாவது,

இந்திய ஹொக்கி சங்கத் தேர்தல் தள்ளிப் போவதால் உலகக் கோப்பை ஹொக்கி போட்டியை இந்தியா நடத்துவதிலோ, அதில் பங்கேற்பதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை.

இந்தப் போட்டியில் பங்கேற்க 12 நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன என்றார். ஹொக்கி சங்கத் தேர்தலை நடத்தினால்தான் இந்திய அணி உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அறிவித்திருந்தது. பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டது. உலகக் கோப்பை ஹொக்கி போட்டி தில்லியில் பெப்ரவரி 28 முதல் மார்ச் 13 வரை நடைபெறும்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •