வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

பதவி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

பதவி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

உட்கட்சி தேர்தலில் அ. தி. மு. க. பிரமுகருக்கு பதவி மறுக்கப்பட் டதால், அவர் தீக்குளிக்க முயன்றார். அவரை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். நெல்லை மாநகர் மாவட்டத்தில் அ. தி. மு. க. உட் கட்சி தேர்தல் நடந்து வருகிறது. வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

22வது வார்டுக்கும் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 22வது நிர்வாகிகள் பெயர் விவரம் வெளியானது.

அதில் பாளையங்கோட்டை சிவன் தெற்கு மாட வீதியைச் சேர்ந்த அருணாசலம் (வயது 64) என்ப வருக்கு பதவி கிடைக்கவில்லை என்றும், பாளை, 22 வது வார்டில் அ. தி. மு. க. மேலமைப்பு பிரதி நிதியாக செயல்பட்டு வந்த அவ ருக்கு பொறுப்பில் தொடர அனு மதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படு கிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அருணாசலம் நேற்று முன்தினம் காலை பாளை சந்தை அருகே உள்ள புறக் காவல் நிலையத்துக்கு திடீர் என்று மண்ணெண்ணையுடன் வந்தார். அங்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு இருந்த பொலிஸாரி டம் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி மண்ணெண்ணெய் கானுடன் அந்தப் பகுதியில் ஓடினார்.

பின்னர் நடு ரோட்டில் நின்று கொண்டு தலையில் மண்ணெண் ணையை ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தார்.

பொலிஸார் மற்றும் பொதுமக்கள் அருணாசலத்தை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை பாளை பொலிஸ் நிலையத் துக்கு அழைத்துச் சென்று விசார ணை நடத்தினர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •