வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

மெக்ஸிகோவில் பஸ் விபத்து; 18 பேர் பலி

மெக்ஸிகோவில் பஸ் விபத்து; 18 பேர் பலி

மெக்ஸிகோவில் நடந்த பஸ் விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்ததுடன், 31 பேர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நடந்தது. 250 மீற்றர் ஆழமான பள்ளத்தில் பஸ் விழுந்ததால் இரண்டாகப் பிளந்த பஸ் வண்டி தூக்கி வீசப்பட்டது. காயமடைந்தோர் வைத்தி யசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

காயமடைந்தோரில் ஐந்து சிறுவர்களும் உள்ளனர். பலியானோரில் மூன்று சிறுவர்கள் உட்பட பெண்களும் அடங்குவர். பலியானோரின் பிரேதங்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் நான்கு சடலங்களை அடையாளம் காண முடி யாதுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மூன்று வயதுக்கும் 26 வயதுக்குமிடைப் பட்டோரே இந்த பஸ் விபத்தில் பலியாகினர். பஸ் வண்டியின் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வாகன விபத்துக்கள் இடம்பெறும் நாடுகளில் மெக்ஸிகோவும் ஒன்று.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •