வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

அமைச்சரவைக்கான பட்டியல் ஆப்கான் எம்.பிக்களால் நிராகரிப்பு

அமைச்சரவைக்கான பட்டியல் ஆப்கான் எம்.பிக்களால் நிராகரிப்பு

ஆப்கானிஸ்தானின் அமைச்சரவைக்கான நியமனங்களை பாராளுமன்றம் நிராகரித்தது. ஜனாதிபதி ஹமித் அல்கார்ஸாயி பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அமைச்சர்களின் பெயர்களைச் சமர்ப்பித்தார். இதில் ஏழு பேர்களின் பெயர்களையே பாராளுமன்றம் அங்கீகரித்தது.

24 பேரை எம். பி. க்கள் நிராகரித்தனர். ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்படும் சூழலை இது உருவாக்கும் எனக் கருதப்படுகின்றது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவைக்கான நியமனங்கள் நிராரிக் கப்பட்டதை மேற்கு நாடுகள் உன்னிப்பாக அவதானித்துள்ளன.

ஊழல் ஒழிப்பு தலிபான்களுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி கார்ஸாயி தயாராகியுள்ள நிலையில் பாராளுமன்றம் இதற்கான ஒத்துழைப்புகளை வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •