வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

மேற்குலகின் கால அவகாசம் முடிவுற்றது: தீர்வில்லையென்றால் ஈரான் தனி வழி செல்லும்

மேற்குலகின் கால அவகாசம் முடிவுற்றது: தீர்வில்லையென்றால் ஈரான் தனி வழி செல்லும்

யுரேனியம் தெறிவூட்டல் பற்றி ஈரான் வெளிநாட்டமைச்சர்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் விடயங்கள் சம்பந்தமாக இறுதி முடிவுவெடுக்க மேற்கு நாடுகள் வேண்டிக்கொண்ட இரண்டு மாத கால அவகாசம் நிறைவடைந்துவிட் டதாகவும் எவ்வித உடன்படிக்கை யும் காணப்படாவிட்டால் ஈரான் தனது வழியில் செல்லுமெனவும் அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பார்வையிடுவதற் காக ரஷ்யாவுக்கும் பிரான்ஸ்சுக்கும் அவற்றை அனுப்ப வேண்டுமென ஐ.நா. ஈரானுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதை நிராகரித்த ஈரான் தனது நாட்டின் எல்லைகளில் வைத்து இவற்றைப் பார்வையிடலாமெனவும் வெளி நாடுகளுக்கு அனுப்பும் நோக்கம் இல்லையென்றும் ஆணித்தரமாகக் கூறியது.

ஈரானின் இந்நிலைப் பாட்டை ஆராய்ந்து முடிவு எடுக்க இரண்டு மாதகால அவகாசத்தை மேற்கு நாடுகள் கோரின. இதற்கு ஈரான் அனுமதித்தது. ஆனால் இரண்டு மாதமாகியும் சரியான முடிவை மேற்கு நாடுகள் அறிவிக்க வில்லை.

இது குறித்து ஈரான் வெளி நாட்டமைச்சு விடுத்த அறிக்கையை அமைச்சின் பேச்சாளர் விளக்கினார். எங்கள் (ஈரான்) நிலைப்பாட்டை அறிய மேற்கு நாடுகள் இரண்டு மாதகாலம் கேட்டனர். அதை ஏற் றுக்கொண்டோம். ஆனால் முடிவு கள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவே ஈரான் தனது வழியில் சென்று யுரேனியத்தை செறிவூட்டும் என ஈரான் வெளிநாட்டமைச்சர் கூறி னார்.

ஐ.நா.வின் வேண்டுகோளை நிராகரித்த ஈரான் வேண்டுமானால் துருக்கிஸ்தானில் வைத்து செறிவூட் டப்பட்ட யுரேனியத்தைப் பார்வை யிட அனுமதிக்க முடியுமென கடந்த மாதம் கூறியதை சர்வதேச அணு முகவர் நிலையம் நிராகரித்தது. ஈரானால் தெரிந்தெடுக்கப்பட்ட இடம் பொருத்தமற்றதெனத் தெரிவி த்தது. அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ஈரான் யுரேனியத்தை அதிகளவு செறிவூட்டி அணு ஆயு தங்களைத் தயாரிப்பதாக சந்தேகிக் கின்றது.

சென்ற ஆண்டு டிசம்பர் 31ம் திகதி விதிக்கப்பட்ட கால அவகாசத்தையும் ஈரான் நிராகரித் தது. இதனால் கோபமடைந்த மேற்கு நாடுகள் மேலும் பல தடைகளை ஈரான் மீது கொண்டு வர யோசனை செய்கின்றன. இவற்றை எல்லாம் உதாசீனம் செய்யும் ஈரான் தனது வழியில் விடாப்பிடியாக நடந்துகொள் கின்றது.

பொது மக்களின் மின்சாரத் தேவைகளுக்காக அமைதி வழியில் யுரேனியம் செறிவூட்டப்படுவதை மேற்குலக நாடுகள் சந்தேகத்துடன் நோக்கத்தேவையில்லையென்றும் விஞ்ஞான வளர்ச்சிகள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை யென்றும் ஈரான் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •