வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010


சரியான முடிவுக்கு வருவதில் எவ்வித சிரமமும் இல்லை

சரியான முடிவுக்கு வருவதில் எவ்வித சிரமமும் இல்லை

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் வகிக் கும் முக்கியத்துவம் பற்றி அரசியல் வட்டாரங்களில் பரவ லாகப் பேசப்படுகின்றது.

முன்னைய ஜனாதிபதித் தேர்தல் களிலும் சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கிய பாத்திரம் வகி த்த போதிலும் இந்தத் தேர்தலில் அவற்றின் முக்கியத்துவம் கூடு தலாக உணரப்படுகின்றது.

சிறுபான்மையினருக்கு இந்த நாடு சொந்த மில்லை எனக் கூறியவர் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிப் பேசுவதையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சட்ட விரோதமானது எனத் தீர்ப்பு வழங்கியவர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று இரு மாகாணங்களினதும் இணைப்பு பற்றிப் பேசுவதை யும் பார்க்கும் போது சிறுபான்மையினரது வாக்குகளின் முக்கியத் துவம் எவ்வளவுக்கு உணரப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள லாம்.

தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்களும் அவர்களது ஆதர வாளர்களும் இந்த முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வது மாத் திரம் போதுமானதல்ல. சிறுபான்மையின மக்களும் இதை விளங் கிக் கொண்டு சரியான முடிவுக்கு வரவேண்டும்.

தேர்தல் காலங்களில் தாராளமாக வாக்குறுதிகளை அள்ளி வீசு வார்கள். ஆராய்ந்து பார்க்காமல் அவற்றை அப்படியே நம்பு வது கானல் நீரை நம்புவது போலாகிவிடும். வாக்குறுதி களை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு வேட்பாளருக்குக் கிடைக்குமா என்பது பற்றியும் அவரது வாக்குறுதிகள் யதார்த்த பூர்வமானவையா என்பது பற்றியும் வாக்காளர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

இன்று தேர்தல் களத்தில் பல வேட்பாளர்கள் நிற்கின்ற போதி லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருமே பிரதானமானவர்கள். மற்றவ ர்களில் எவராவது கட்டுப்பணத்தைக் காப்பாற்றிக் கொண் டாலே பெரிய விடயம்.

இரண்டு பிரதான வேட்பாளர்களும் அளிக்கும் வாக்குறுதிகளை அவற்றின் நடைமுறைச் சாத்தி யத் தன்மையையும் வேட்பாளரின் கடந்தகால செயற்பாடு களையும் மாத்திரமன்றி, அவ்வாக்குறுதிகளை நடைமுறைப் படுத்துவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்குமா என்ப தையும் கவனத்தில் எடுத்தே பரிசீலிக்க வேண்டும்.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாகப் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் பொன் சேகா கூறுகின்றார். கடந்த காலங்களில் சிறுபான்மையினர் பற்றி இவர் தெரிவித்த பேரினவாதக் கருத்துகள் இவரது வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதற்குத் தடையாக இரு க்கின்றன. மேலும், இவர் வெற்றி பெற்றாலும் கூட வாக் குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை.

வென்றாலும் தோற்றாலும் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணக்கப் பாட்டோடு செயற்படப் போவதாகப் பொன்சேகா கூறியிருக் கின்றார். பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதைத் தீவிரமாக எதிர்க்கும் மக்கள் விடு தலை முன்னணி இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசி யல் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்குப் பொன்சேகாவை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

மறுபுறத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடைமுறைச் சாத்தி யமற்ற வாக்குறுதிகளை வழங்கவில்லை. பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் பாராளும ன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக் கும் பட்சத்தில் அதனிலும் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் கூறுகின்றார்.

இன்றைய நிலையில் இது யதார்த்தபூர்வமான வாக்குறுதி. கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி பதின்மூன்றா வது திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின் றார். தேர்தலுக்குப் பின் வட மாகாணத்திலும் அதை நடை முறைப்படுத்துவாரென நம்பலாம். இதுவே இன்றைய நிலை யில் நடைமுறைச் சாத்தியமான தீர்வென்பதால் இதை ஏற் றுக் கொண்டு படிப்படியாக முழுமையான தீர்வை நோக்கிச் செல்ல முடியும்.

இரண்டு வேட்பாளர்களினதும் வாக்குறுதிகளையும் அவற்றின் நடைமுறைச் சாத்தியத் தன்மையையும் சீர்தூக்கிப் பார்த்துச் சரியான முடிவுக்கு வருவதில் சிறுபான்மையினருக்கு எவ் வித சிரமமும் இல்லை.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி