வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

பெண்கள் அபிவிருத்தி கூட்டுறவு இயக்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று முன்தினம் சந்தித்தனர். நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுவதைக் காணலாம்.
(படம்:- சுதத் சில்வா)

 

தனிநபர் வருமானத்தை 6 ஆயிரம் டொலராக அதிகரிப்பதே இலக்கு

‘உரிய முறையில் திட்டங்கள் முன்னெடுப்பு’ - ஜனாதிபதி

கடந்த நான்கு வருட காலத்தில் இலங்கையரின் தனிநபர் வருமானத்தை 2200 அமெரிக்க டொலர்கள் வரை அதிக ரிக்கச் செய்துள்ளேன். இவ்வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கச் செய்வதே எனது இலக்கு என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களுடனான (மருத்துவ மாதுகள்) சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விவரம் »

 

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்

விரைவில் அறிமுகம் - ஜனாதிபதி

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்ப னவு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாடளாவிய ரீதியிலுள்ள முன்பள்ளி ஆசிரியைகளுடனான சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந் தும் உரையாற்றுகையில், கடந்த கால ஆட்சியாளர்கள் பாலர் கல்வி குறித்து கவனம் செலுத்தவில்லை.

விவரம் »

 

பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை

தலவாக்கலை சோக மயம்; அரசியல் பிரமுகர்கள்,
திருமாவளவன் பங்கேற்பு

காலஞ்சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தலவாக்கலை லிந்துலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.அமைச்சரின் வீட்டிலிருந்து நேற்று நண்பகல் ஒரு மணிக்கு முக்கிய பிரமுகர்கள், மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ எடுத்து வரப்பட்ட அமைச்சரின் பூதவுடல் மாலை மூன்றரை மணியள வில் லிந்துலை நகர சபை மைதானத்தை அடைந்தது.

விவரம் »