வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

யெமென், சோமாலியாவிலுள்ள அமெரிக்க, பிரிட்டன் தூதரகங்கள் மூடப்பட்டன

யெமென், சோமாலியாவிலுள்ள அமெரிக்க, பிரிட்டன் தூதரகங்கள் மூடப்பட்டன

யெமென், சோமாலியாவிலுள்ள அமெ ரிக்க, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மூடப்பட்டுள்ளன. இவ்விரண்டு நாடுகளிலும் தீவிரவாதிகளை முறியடிக்க பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள நிலையில், இவ்விரு நாடுகளின் தூதரகங்களும் மூடப்படவுள்ளன.

அல்கைதா அமைப்பின் அச்சுறுத்தல்கள் இந்த தூதரகங்களுக்கு வந்தவண்ணமுள்ளன. கிறிஸ்மஸ் தினத்தில் அமெரிக்க விமானம் தாக்கப்படவிருந்த மையும் பின்னர் இம்முயற்சி கண்டு பிடிக்கப்பட்டதையடுத்தும் நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

யெமன் தலைநகர் சனாவிலுள்ள பிரிட்டன் தூதரகம் ஜனவரி மூன்றாம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக லண்டனிலுள்ள வெளிநாட்டு அமைச்சு அறிவித்தது. இதையடுத்து அமெரிக்காவும் தூதரகத்தை மூடும் முடிவுக்கு வந்துள்ளது. ஸ்பெய்ன் இவ்விரு நாடுகளிலுள்ள தூதரகங்களை மூட எண்ணியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யெமனிலுள்ள அமெரிக்கா, பிரிட்டன் தூதரகங்களுக்கு அச்சுறுத்தலுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள யெமென் அரசாங்கம், அல்கைதா எவ்வித அச்சுறுத்தலையும் விடுக்கவில்லையெனவும் உள்ளூர் அமைப்புகளே தொலைபேசியூடாக தூதரகங்களை மிரட்டி வருவதாகத் தெரி வித்தது.

அரபு நாடுகளிலுள்ள இஸ்லாத்துக்கு எதிரானோரை வெளியேறுமாறு அண்மை யில் அல் கைதா மிரட்டியுள்ளது. இல்லா விட்டால் இவர்களுக்கெதிராக புனிதப் போரிட அனைத்து முஸ்லிம்களையும் தயார் செய்யும் படியும் அல் கைதா கேட்டுள்ளது. இவ்வாறான நிலைமைகளால் லண்டன், வாஷிங்டன் என்பன தூதரகங் களை மூடியுள்ளன.

யெமென், சோமாலியா நாடுகள் பற்றியும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலவும் நிலைமைகளையும் ஆராயும் மாநாடு இம் மாதம் 28ம் திகதி பிரிட்டனில் ஆரம்பமாகவுள்ளது. நாற்பது நாடுகளின் தலைவர்கள், அமைச் சர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •