வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

ஹமாஸ், பதாவிடையே இணக்கப்பாடு ஏற்பட்டு விரைவில் ஐக்கிய பலஸ்தீன் உருவாகும்

ஹமாஸ், பதாவிடையே இணக்கப்பாடு ஏற்பட்டு விரைவில் ஐக்கிய பலஸ்தீன் உருவாகும்

ஹமாஸ் முக்கியஸ்தர் காலித் மெஷால்

பதாஹ் அமைப்புடன் இணக்கப்பாட்டை எய்தும் இறுதி நிலைக்கு வந்துள்ளதாக ஹமாஸின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாளரான காலித் மெஷால் தெரிவித்தார்.

பலஸ்தீன் அமைப்புக்களான ஹமாஸ், பதாஹ் இரண்டையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்து காஸாவையும் மேற்குக் கரையையும் இணைக்கும் முயற்சிகள் நீண்டகாலமாக நடைபெறுகின்றன. எகிப்து இப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிரதான மத்தியஸ் தம் வகிக்கின்றது. பேச்சுக்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் காலித் மெஷால் சவூதி அரேபியா சென்றார்.

சவூதி வெளிநாட்டமைச்சருடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்திய காலித் மெஷால் தெரிவித்ததாவது, எகிப்தின் திட்டத்துக்கு இணங்க ஹமாஸிடம் சில விடயங்கள் உள்ளன. நாங்கள் சகல விடயங்களுடனும் இணங்கிச் செல்லவுள்ளோம்.

கெய்ரோவில் இடம்பெறும் அடுத்த கட்டப் பேச்சுக்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு சாதனை நிலைநாட்டப்படும் என்றார். பலஸ்தீனத்தில் இவ்வருடம் ஜுன் மாதம் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படவு ள்ளன. இதற்கிடையில் ஹமாஸ் பதாஹ் அமைப்புக்களை இணங்க வைத்து காஸாவையும் மேற்குக் கரையையும் மீளவும் இணைத்து ஐக்கிய பலஸ்தீனை உரு வாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகி ன்றன.

ஹமாஸ் - பதாவிடையே 2007 ஆம் ஆண்டு அதிகார மோதல்கள் வெடித்ததால் காஸாவும் மேற்குக் கரையும் வெவ்வேறாகப் பிரிந்தன. ஹமாஸ் காஸாவையும், பதா மேற்குக் கரையையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. எகிப்தின் பங்களிப்புக்கு மேலாக சவூதி அரேபியாவும் எங்களை மீள இணைக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமென நம்புவதாக காலித் மெஷால் குறிப்பிட்டார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •