வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

ஐ.சி.சி.க்கு இந்திய கிரிக்கெட் சபை பதில் தகுதியற்றது என்று சொல்ல முடியாது

கோட்லா ஆடுகளம் விவகாரம்;

ஐ.சி.சி.க்கு இந்திய கிரிக்கெட் சபை பதில் தகுதியற்றது என்று சொல்ல முடியாது

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டில்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதான த்தில் கடந்த 27ம் திகதி நடந்தது.

இந்த போட்டியின் போது பந்து வீச்சு வழக்கத்துக்கு தாறாக மாறு மாறாக எகிறியதால் 23.3 ஓவர்கள் முடிந்த நிலையில் போட்டியைரத்து செய்வதாக போட்டி நடுவர் ஆலன் ஹர்ஸ்ட் அறிவித்தார்.

ஆடுகளம் போட்டியை நடத்த உகந்ததாக இல்லாததால் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக தெரி விக்கப்பட்டது. இதனால் டில்லி ஆடுகளத்துக்கு 12 மாதம் முதல் 24 மாதம் வரை தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பிட்ச் குறித்து 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் சபைக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் கோட்லா ஆடுகளம் பிரச்சினை குறித்து தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஐ. சி. சி. க்கு இந்திய கிரிக்கெட் சபை பதில் அனுப்பி உள்ளது. அதில் அன்று வீசப்பட்ட 130 பந்துகளில் 7 பந்துகள் மட்டுமே விளையாடுவ தற்கு ஏற்ற வகையில் இல்லை.

அதிலும் குறிப்பாக சுதீப் தியாகி மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய 5 பந்துகள் தான் எகிறியது. 20 ஓவர்கள் கடந்த பிறகு தான் ஆடுகளம் சர்ச்சை கிளம்பியது.

எனவே, கோட்லா ஆடுகளம் தகுதியற்றது என்று சொல்ல முடி யாது.

ஆடுகளம் மோசமாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்ல லாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆடுகளம் மோசம் என்று முடிவு செய்யப்பட்டால் ரூ. 7 இலட்சம் அபராதம் மட்டுமே விதிக்க முடியும்.

னீஆனால் விளையாடுவதற்கு லாயக்கற்றது என்ற முடிவுக்கு வந்தால் மட்டுமே ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை தடை விதிக்க முடியும்.

டில்லி மைதானத்தின் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் நடத்தும் வாய்ப்பை காப்பாற்ற ஆடுகளம் மோசம் என்ற வாதத்தை இந்திய கிரிக்கெட் சபை கையில் எடுத்துள்ளது. கோட்லா மீது என்ன நடவடிக்கை என்பதை இந்த மாதம் இறுதியில் ஐ. சி. சி. அறிவிக்கும்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •