வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

பாகிஸ்தான் அணி வலுவான நிலையில்

பாகிஸ்தான் அணி வலுவான நிலையில்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் வலு வான நிலையில் உள்ளது. அந்த அணி அவுஸ்திரேலியாவை விட 200 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலி யாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணி களுக்கும் இடையிலான முதல் டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடை பெற்று வருகிறது. முதல் நாளான நேற்று முன்தினம் அவுஸ்திரேலியா முத லில் ஆடி 127 ஓட்டங்களில் சுரு ண்டது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி னார்.

பின்னர் ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சை தொடர் ந்து ஆடியது. துவக்க வீரர்கள் இம் ரான் ஃபர்கத் மற்றும் சல்மான்பட் பொறுப்பாக ஆடி பாகிஸ்தானுக்கு நல்ல துவக்கத்தை அளித்தனர்.

இந்த ஜோடி 109 ஓட்டங்களை குவித்த நிலையில், இம்ரான் ஃபர்க்த் 53 ஓட்டங்களில் ஆட்ட மிழந்தார். தொடர்ந்து சல்மான்பட் 77 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். முகம்மது யூசுப் 46 ஓட்டங்களும், உமர் அக்மல் 49 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. எனினும் அவுஸ்திரேலியா தரப்பில் போலிங்கர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி பாகிஸ்தான் ஓட்டகுவிப்பை கட்டுப் படுத்தினார்.

ஆட்டநேர இறுதியில் பாகிஸ் தான் 9 விக்கெட் இழப்புக்கு 331 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அவுஸ் திரேலியாவை விட 200 ஓட்டங்களு க்கு மேல் பாகிஸ்தான் கூடுதலாக பெற்றுள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •