வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

இலங்கை அணி ஏழு விக்கெட்டால் வெற்றி

இலங்கை அணி ஏழு விக்கெட்டால் வெற்றி

பங்களாதேஷ¤டனான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி யீட்டியது.

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டில்சானின் அபார சதத்தால் இலங்கை அணி இவ்வெற்றி இலங்கை அடைந்தது.


,இலங்கை பங்களாதேஷ் அணிகளுடனான ஆட்டம்

பங்களாதேஷ் பெற்ற 260 ஓட்டங்களைப் பெற இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக தரங்க, டில்சான் களமிறங்கினர். தரங்க 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.

இதேவேளை இலங்கை அணிக்கு குமார் சங்கக்கார டில்சானுடன் ஜோடி சேர்ந்த இலங்கை அணியின் ஓட்டவேகத்தை ஆடி இருவரும் உயர்த்தினர்.

சங்கக்கார 74 ஓட்டங்களையும், டில்சான் 104 ஓட்டங்களையும், சமரவீர ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும், சாமர சில்வா ஆட்டமிழக்காமல் 04 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதேவேளை இலங்கை அணியின் டில்சான் பெற்ற சதம் இவ்வருடத்தில் பெற்ற முதலாவது சதம் என்பதாகும்.

டில்சான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்ததும் இப்போட்டியில் குறிப்பிடத்தக்கது.

முக்கோண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முக்கோணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதலாவது போட்டியில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக முஹம்மது அஷ்ரபுல் 94 பந்துகளை எதிர்க்கொண்டு 75 ஓட்டங்களைப்பெற்றார்.

பங்களாதேஷ் அணி ஒரு கட்டத்தில் 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திசைமாறியது. அவ்வணியில் இக்பால் 40 ஓட்டங்களையும் கைஸ் 23 ஓடங்களையும் தலன் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் சதிப் அல்ஹஸன் ஒரு ஓட்டத்தையும் ரஹிம் 35 ஓட்டங்களையும் மஃமூதுல்லா 45 ஓட்டங்களையும், இஸ்லாம் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் ரஸ்ஸாக் ஒரு ஓட்டத்தையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக ரான்டிவ், லக்மால் தலா இரண்டு விக்கெட்டையும், குலசேகர, டில்சான் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தனது களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •