வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

பதுளை மாவட்ட உதைபந்தாட்டம்; வெற்ரன்ஸ் அணி சம்பியன்

பதுளை மாவட்ட உதைபந்தாட்டம்; வெற்ரன்ஸ் அணி சம்பியன்

பதுளை மாவட்ட உதைபந்தாட் டச் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த பதுளை லீக் பிரிவுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் பதுளை வெற்ரன்ஸ் விளையாட்டுக்கழகம் 04 கோல்களால் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தைத் தட்டிக்கொண்டது.

பதுளை வின்சன்ட் டயஸ் பொது விளையாட்டு மைதானம், கிரிக்கெட் மைதானம் இடையே மத்தியில் அமைந்துள்ள உதைபந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தமாகக13 அணிகள் போட்டியிட்டன. அரையிறுதிப் போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் ஓல்ட்வைட் வி. கழகத்தை வென்று மாநகர சபை அணியும், ஊவா வி. கழகத்தை வென்று வெற்ரன்ஸ் அணியும் போட்டியிட்டன.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இடைவேளைக்கு முன்னும் பின்னும் மாநகர சபை அணி எதுவித கோலையும் போடவில்லை. முன்னணியில் ஆதிக்கம் செலுத்திய வெற்ரன்ஸ் அணி 4 – 0 என்னும் கோல் வித்தியாசத்தில் மாநகர சபை அணியை வெற்றியீட்டியது.

வெற்ரன்ஸ் அணி சார்பாக கீர்த்தி ரத்ன 02 கோல்களையும் ஐயந்த டி சில்வா, நிமல் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்து தனதனியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். (அ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •