வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

பொருளாதார சீர்திருத்த நகல்கள் சிம்பாப்வே பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்புபொருளாதார சீர்திருத்த நகல்கள் சிம்பாப்வே பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

பொருளாதார சீர்திருத்த நகல்கள் சிம்பாப்வே பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே புதிய பொருளாதார சீர்திருத்தங்களை பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார். நிலக்கரிகனிய உப்புக்களின் அகழ்வுகள் குறித்து புதிய கொள்கைகளை முன்மொழிந்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அதிக நன்மையடையும் வகையில் இந்தச் சீர்திருத்தங்கள் அமைந்துள்ளன.

பாராளுமன்றத்தில் ஒருவாரத்திற்கு இப்புதிய சீர்திருத்தம் விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேயில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுக் கம்பனிகளின் சலுகைகள் மட்டுப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அக்கம்பனிகள் கவலையடைந்துள்ளன.

அங்கோலாவின் கம்பனிகள் உட்பட பல கம்பனிகள் மீண்டும் சிம்பாப்வேயில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட அரசியல் வன்முறைகளால் வெளிநாட்டுக் கம்பனிகளின் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

சிம்பாப்வே அரசாங்கத்தால் நடைமுறைப் படுத்தவுள்ள புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் வெளியில் பிரசுரிக்கப்பட மாட்டா என்பதால் தனியார் கம்பனிகள் அரசாங்கத்தின் இது குறித்த அறிக்கைகளை எதிர்பார்த்துள்ளன.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •