வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்ட கப்பல் கப்பம் செலுத்தப்பட்டபின் விடுவிப்பு

கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்ட கப்பல் கப்பம் செலுத்தப்பட்டபின் விடுவிப்பு

சிப்பந்திகள் 23 பேரும் விமானம் மூலம் துருக்கி வர ஏற்பாடு

சோமாலியக் கடற் கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்ட கப்பல் கப்பம் செலுத்தப்பட்ட பின் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டது. அத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 மாலுமிகளும் விடுதலையாகினர்.

மூன்று மாதங்களாக இக்கப்பல் கடற் கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.எவ்வளவு தொகை கப்பல் கொள்ளையர்களுக்கு வழங்கப் பட்டதென்பதை கப்பல் சொந்தக்காரர்கள் தெரிவிக்கவில்லை. இஸ்தான்பூலைத் தளமாகக் கொண்டியங்கும் ஹொரிசோன் என்ற கப்பல் ஜுலை 08ம் திகதி கடத்தப்பட்டது.

சவுதி அரேபியாவிலிருந்து 33 ஆயிரம் கியூபிக் மீற்றர் எண்ணெய்களுடன் ஜோர்தானுக்குச் சென்று கொண்டிருந்த போது சோமாலியாவின் பட்லாந் பிராந்தியத்தில் இந்த வர்த்தகக் கப்பல் கடத்தப்பட்டது. அந்நேரம் 20 மில்லியன் டொலரை கொள்ளையர்கள் கப்பமாகக் கோரினர்.

ஆனால் எவ்வளவு வழங்கப்பட்டதென்ற விபரங்கள் வெளியாகவில்லை. வெள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட ஹெரிசோன் என்ற கப்பல் பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 23 சிப்பந்திகளும் விமானம் மூலம் துருக்கிக்கு கொண்டுவரப்படுவர்.

புதிய மாலுமிகளால் கப்பல் ஜோர்தானுக்குச் செல்லுமென கப்பல் கம்பனி உரிமையாளர்கள் தெரிவித்தனர். சோமாலியாவின் கடல் பகுதியில் கொள்ளையர்கள் அதிகரித்துள்ளதால் கப்பல் போக்குவரத்திற்கு பெரும் ஆபத்தேற்பட்டுள்ளமை தெரிந்ததே.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •