வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகளை விளக்க கடாபி இன்று விசேட உரை

லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகளை விளக்க கடாபி இன்று விசேட உரை

லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகளை விளக்கும் வகையில் ஜனாதிபதி முஹம்மர் கடாபி விசேட உரையாற்ற வுள்ளார். அரச உயரதிகாரிகள் இந்த படை தளபதிகள் பொலிஸ் உயரதிகாரிகள் வைபவத்தில் பங்கேற்கவுள்ளனர்.

சுமார் ஆயிரம் பேர் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று புதன்கிழமை இந்த விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளது.

லிபிய ஜனாதிபதி முஹம்மர் கடாபியின் உரை மரபுரியாக இருக்குமென சிலரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளதாகச் சிலரும் கூறுகின்றனர். லிபியாவின் நாற்பதாவது சுதந்திர தினம் செப்டெம்பர் 01ம் திகதி கொண்டாடப்பட்டது.

அங்கு உரையாற்றிய கடாபி லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்து உரையாற்றவில்லை. இது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையளித்தது. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு கடாபி உள்நாட்டு கொள்கைகளை விளக்கவுள்ளார்.

மேற்கு நாடுகளின் நெருக்குதல், அழுத்தங்களுக்குட்படாத லிபியாவையே கடாபி விரும்புகின்றார். தென்னமெரிக்க நாடுகளுடன் ஆபிரிக்க நாடுகளையும் இணைத்து பொதுவான அணியை உருவாக்குதல், ஏகாதிபத்திய வாதத்துக்கெதிராக செயற்படல் என்பன கடாபியின் முக்கிய நோக்கம்.

எரிபொருட்களூடாகப் பெறும் வருமானங்களை உள்நாட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தவும் அரச அதிகாரிகள் நிறுவனங்களிடையே நிலவும் ஊழல், குறைபாடுகளைக் களையவும் கடாபி கொள்கை வகுப்பார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •