புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 

தேசிய வைத்தியசாலைக்கு குருதி அழுத்த மீற்றர்கள் அன்பளிப்பு செய்த லிட்ரோ காஸ்

தேசிய வைத்தியசாலைக்கு குருதி அழுத்த மீற்றர்கள் அன்பளிப்பு செய்த லிட்ரோ காஸ்

இலங்கையில் திரவப் பெற்றோலிய வாயு இறக்குமதியில் ஈடுபடும் மாபெரும் நிறுவனமான லிட்ரோ காஸ், லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா உடன் இணைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு குருதி அழுத்த அளவீட்டுக்கருவிகளை அன்பளிப்பு செய்திருந்தது. சமூகத்துக்கான தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது.

குடும்ப சுகாதார செயலகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், 100 இலங்கையர்களில் இருபது பேர் உயர் குருதி அழுத்தத்தினால் அவதியுறுவது கண்டறியப்பட்டிருந்ததுடன், இதற்கு பிரதான காரணங்களாக கிருமிநாசினிகளால் பாதிக்கப்பட்ட உணவுகள் மற்றும் தவறான உணவு பழக்க வழக்க முறைகள் போன்றன கண்டறியப்பட்டிருந்தன. இதன் மூலமாக பொது மக்களுக்கு ஆலோசனைகளை பெறுவது, பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்திக் கொள்வது என்பது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உறுதியாகியுள்ளது.

வைத்தியசாலைக்கும் நோயாளர்களுக்கும் அனுகூலமளிக்கும் வகையில் 40 குருதி அழுத்த சோதனைக் கருவிகள் பெருமளவு உதவியாக அமைந்திருக்கும். இந்த கருவிகளை லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட் தலைவர் ஷலில மூனசிங்க, லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவட் லிமிட்டெட் பணிப்பாளர் நோபர்ட் பெர்னான்டோ, லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஹேமலால் பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். அனில் ஜயசிங்க, தேசிய வைத்தியசாலைகள் கழகத்தின் தலைவர் வைத்தியர். ரிஸ்வி ஃபரூக், ஆகியோருடன், லிட்ரோ காஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட ஊழியர்கள் மற்றும் தேசிய வைத்தியசாலையின் அதிகாரிகள் ஆகியோர் இந்த கருவிகளை பரிசோதித்திருந்தனர்.

இலங்கையில் திரவ பெற்றோலிய வாயு விற்பனையிலும் சந்தைப்படுத்தலிலும் சந்தை முன்னோடியாக லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட் (LGLL) செயற்படுகிறது. இணை நிறுவனமான லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவட் லிமிட்டெட் உடன் இணைந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. லிட்ரோ காஸ் வர்த்தக நாமத்தின உரிமையாண்மையை நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த தனது 5000 விற்பனை மையங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு நியமங்களைக் கடுமையாக பேணுவதற்காக லிட்ரோ காஸ் நன்மதிப்பைக் கொண்டுள்ளது. கம்பனியின் கொள்கையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.