புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 

East West Marketing நிறுவனம் அறிமுகப்படுத்தும் திம்புல தேயிலை மூலம் புரட்சிகரமான சுவை மாற்றம்

East West Marketing நிறுவனம் அறிமுகப்படுத்தும் திம்புல தேயிலை மூலம் புரட்சிகரமான சுவை மாற்றம்

விரைவாக விற்றுத் தீருகின்ற நுகர்வோர் உற்பத்திகளை விநியோகிப்பதில் இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற ஒருநிறுவனமாகத் திகழ்ந்துவருவதுடன், நவலோக ஹோல்டிங்ஸ் குழுமத்தின் ஒரு உறுப்பு நிறுவனமாகவும் தொழிற்படுகின்ற East West Marketing, அண்மையில் திம்புல தேயிலையை அறிமுகம் செய்து வைத்துள்ளதன் மூலமாக தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்ற தனது உற்பத்தி வரிசையின் கீழ் மற்றுமொரு நட்சத்திர வர்த்தக நாமத்தை சேர்த்துக் கொண்டுள்ளது. 4,000 அடிக்கும் மேலான உயரத்தில் அமைந்துள்ள திம்புல என்ற இடத்தில் அமைதியான மலைநாட்டு நிலங்களில் வளர்க்கப்படுகின்ற புத்துணர்ச்சியூட்டுகின்ற, கனிந்த தேயிலைக் கொழுந்துகளை உபயோகித்து, நவீனதொழில்நுட்ப உபகரணங்களின் உதவியுடன் இத்தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. அப்பிராந்தியத்தின் தனித்துவமான சுவையைக் கொண்டுள்ள திம்புலதேயிலை சுவையைத் கவனமாகத் தேர்ந்தெடுக்கின்றவர்களின் நாவுகளுக்கும் சுவையூட்டி, தனித்துவமான சுவைக் கலவைகளுடன், ஒருநிறைவான நறுமணக் கலவையாக கிடைக்கப் பெறுகின்றது.

நவீன பொதியிடல் வசதிகள், புத்தம் புதிய வாகனத் தொகுதிகள் மற்றும் அதிநவீன விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் ஆகியன திம்புல தேயிலை உங்களது கோப்பை ையஎட்டும் வரை அதன் புத்துணர்ச்சி தொடர்ந்தும் பேணப்படுவதை உறுதிசெய்கின்றன

“தேயிலை எமது சமூககட்டமைப்பில் முக்கிய ஒருபங்கு வகிப்பதுடன், ஒருதேசம் என்ற வகையில் சர்வதே ரீதியாக எமது தனித்துவமான அடையாளத்தின் ஒரு அங்கமாகவும் திகழ்கின்றது. இதனாலேயே நாம் இந்த புதிய ஆண்டில் அறிமுகப்படுத்தும் முதலாவது உற்பத்தியாக திம்புல தேயிலையை தொிவுசெய்தோம். உலகெங்கும் உள்ள மக்கள் நீண்டகாலமாக அனுபவித்து மகிழ்ந்து வந்துள்ள தரமான இலங்கை தேயிலை நியாயமான விலைகளில் எமது தேசத்திலுள்ள மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினோம்”என East West Marketing நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான ஜயந்ததர்மதாச குறிப்பிட்டார்.

எமது தேசத்தின் தேவைகளை ஈடுகட்டுவதற்கு, தரமான உற்பத்திகளை வழங்கவேண்டும் என்ற இலக்கில் East West Marketing நிறுவனம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தியுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டிலுள்ள தனது பங்காளா்களின் நீண்டகால உறவுமுறைகளின் அனுகூலத்துடன், உலகில் முன்னிலை வகிக்கும் ,விரைவாக விற்றுத் தீருகின்ற நுகர்வோர் உற்பத்திகள் சிலவற்றை நாடெங்கிலும் அறிமுகம் செய்து, விநியோகித்து வருவதில் ஈடுபட்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.