புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 

Galle Face ஹோட்டலின் கொண்டாட்டங்களில் ஒரு அங்கமாக புகழ்பெற்ற Cannonball Run நிகழ்வு

Galle Face ஹோட்டலின் கொண்டாட்டங்களில் ஒரு அங்கமாக புகழ்பெற்ற Cannonball Run நிகழ்வு

இலங்கைக்காக பிரான்ஸ் தூதுவர் ஜோன்-மரின் ஸ்கூ மற்றும் ஜேர்மனிய தூதுவர் ஜுவெர்கன் மொர்ஹாட் ஆகியோரின் பங்கேற்பில், பாரம்பரிய புகழ்பெற்ற Cannonball run நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. 150 வருட பூர்த்தியை கொண்டாடும் Galle Face ஹோட்டலின் கொண்டாட்டங்களில் ஒரு அங்கமாக 2016 மார்ச் மாதம் 18 ஆம் திகதி இந்நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் மாஸ்டர் ஒப் Cannonball ஆக சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ மத அலுவல்கள் மற்றும் காணி அமைச்சரான ஜோன் அமரதுங்க கலந்து கொண்டார்.

Cannonball run நிகழ்வு என்பது வருடாந்தம் பாரம்பரியமாக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் நிகழ்வாக அமைந்துள்ளது. 1845 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆர்ட்லரி அங்கத்தவர் ஒருவரால் தவறுதலாக வெடிக்கப்பட்டமையை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது. கொழும்பு கோட்டை பகுதியில் 30 பவுண்ட் எடை கொண்ட cannon ஒன்று தவறுதலாக பயிற்சியின் போது வெடிக்கப்பட்டிருந்தது. இது Galle Face ஹோட்டலின் கூரையின் மீது விழுந்து பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த Cannonball தற்போது ஹோட்டலின் தெற்கு வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புகழ்பெற்ற நிகழ்ச்சியை குறிக்கும் வகையில், வருடாந்தம் ஓடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. இது கொழும்பு காலி முகத்திடலின் Cannon நிறுவப்பட்டுள்ள பகுதியில் ஆரம்பித்து ஹோட்டலின் Cannonball வைக்கப்பட்டுள்ள பகுதியில் நிறைவடைகிறது. இந்த ஓட்டத்தில் பங்குபற்றுபவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளின் அங்கத்தவராக அமைந்திருப்பர். கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் தூதுவர் ரொபர் ஓ பிளேக் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பீற்றர் ஹேஸ் (2008), மாலைதீவுகள் தூதுவர் அலி ஹுஸைன் திதி மற்றும் ரஷ்ய தூதுவர் விளாடிமிர் பி மிக்கேலோவ் (2010), பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டின் ரொபிகொன் மற்றும் நோர்வே தூதுவர் ஹில்டே ஹரல்ஸ்டாட் (2011),கனேடிய உயர் ஸ்தானிகர் ப்ரூஸ் லெவி மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரான்கின் (2012) ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்ற சிலராவர்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.