புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 

பனை ஓலையும் எழுத்தாணியும் இணையும் நல்லிணக்க முயற்சி

தென்னிலங்கை ஊடகவியலாளர்களது 03 நாள் பயணம் நேற்று ஆரம்பம்

ஊடக அமைச்சர்களும் பங்கேற்பு வழிநெடுகிலும் அமோக வரவேற்பு

'பனை ஓலையும் எழுத்தாணியும் ஒன்றாக இணையும் நல்லிணக்க பயணம்' எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென்னிலங்கை ஊடகவியலாளர்களையும், வடபகுதி ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைக்கும் ஊடகக் குழுவினரின் மூன்று நாள் நல்லிணக்க வெற்றிப்பயணம் நேற்றுச் சனிக்கிழமை கொழும்பிலிருந்து ஆரம்பமாகி பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து விசேட புகையிரதம் மூலமாகத் தமது வடக்கு நோக்கிய பயணத்தை  ஆரம்பித்த சுமார் 90 பேர் கொண்ட மும்மொழிகளையும் சேர்ந்த ஊடகவியலாளர் குழுவிற்கு குருணாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களில் பிரதேச ஊடகவியலாளர்களாலும், பொதுமக்களாலும் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த ஊடகவியலாளர் குழுவுடன் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் பயணத்தில் தென்னிலங்கை மற்றும் வடபகுதி ஊடகவியலாளர்களிடையே காணப்படும் இடைவெளியை நிரப்புவதுடன் இரு தரப்பினரிடையேயும் மேலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விவரம்»


 

 

கொழும்பில் இடம்பெற்றுவரும் கம்பன் விழா - 2016 இல் ஆரம்பநாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக மலேசிய நாட்டு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ எம். சரவணன் கலந்து கொண்டார். அவருக்கு கம்பன் கழக பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தபோது எடுத்த படம். அருகே கழகத் தலைவர் தெ. ஈஸ்வரனும் காணப்படுகிறார்.

 

 

(படம்: கே. பொன்னுத்துரை)

  

Other links_________________________

கம்பன் விழாவில் இன்று

பி. சுசீலாவிற்கு விருது பிரதமர் வழங்கி கௌரவிப்பு

கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா கடந்த 24ஆம் திகதி ஆரம்பமானது. இன்று 27ஆம் திகதி வரை காலை, மாலை நிகழ்வுகளாக கொழும்பு கம்பன்கழக பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன், தலைவர் தெ.ஈஸ்வரன் ஆகியோரின் தலைமையில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இன்றைய நிகழ்வில் தமிழக பின்னணிப் . . . . .

விவரம்»

ஒரு சிறு கிடுகுக் கொட்டில் வீடுகூட கட்டித் தர முன்வராதோரின் செயலுக்கு கண்டனம்:

65,000 வீட்டுத் திட்டம்

அரசியலாக்க வேண்டாம்

எதிரும் புதிருமாக அறிக்கைவிடும் அரசியல்வாதிகளிடம் பயனாளிகள் மன்றாட்டம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுச் சொத்துக்களை இழந்து இருக்க இடமில்லாது ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து அலைந்து திரியும் தமக்கு அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் கட்டித்தர ஏற்பாடு செய்துள்ள 65,000 வீட்டுத் திட்டத்தில் தேவையற்ற விதத்தில் மூக்கை நுழைத்து உங்களது அரசியல் இருப்பிற்காக அதனை அரசியலாக்கி . . . . .

விவரம்»

தமிழரை அணுகுவதை வரவேற்கிறோம்: ஆனால்...

அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன?

தெளிவுபடுத்த வேண்டுமென்கிறார் அமைச்சர் மனோ

“அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலமே தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும்”என கொழும்பு கம்பன் கழகத்தில் உரையாற்றிய என் இனிய நண்பர் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். தமிழர்களை நோக்கி ஜேவிபி இன்று நகர்வுகளை மேற்கொள்வதையும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன். ஆனால், தமிழ் மக்களை பொறுத்தவரையில், . . . .

விவரம்»


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.