செல்வி
பவதாரணி மகேஸ்வரன் மற்றும் செல்வி பவித்ரா மகேஸ்வரன் ஆகியோரின் பரத நாட்டிய
அரங்கேற்றம் எதிர்வரும் 20ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி
புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம
விருந்தினராகவும், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கௌரவ அதிதியாக வும்
கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீமதி
சோபனா பாலசந்திரா (ஸ்தாபக இயக்குனர் தரங்கினி பரத நாட்டிய கல்லூரி) மற்றும் டி. சி.
சண்டேர்ஸ் (அதிபர், கொழும்பு சர்வதேச பாடசாலை) ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துக்
கொள்ளவுள்ளனர். கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன நெறியாள்கையில், அணிசேர்
கலைஞர்களாக, குரலிசை ஸ்ரீ. ஆரூரன், மிருதங்கம் ஸ்ரீ. கார்த்திகேயன் இந்தியா), வயலின்
ஸ்ரீ. திபாகரன், புல்லாங்குழல் ஸ்ரீ. பிரியந்த மற்றும் தாள தரங்கம் ஸ்ரீ. ரத்னதுரை
ஆகியோரின் பங்களிப்புடன் அரங்கேற்றம் நடைபெறவுள்ளது.