புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையெனில் எப்போது இறந்தார்

முன்னாள் இராணுவத் தளபதியின் பாராளுமன்ற உரையை அலட்சியமாக எடுத்தவிட முடியாது:

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையெனில் எப்போது இறந்தார்

இறந்தால் அவரது உடலுக்கு என்ன நடந்தது? தெளிவுபடுத்துவது அரசின் பொறுப்பு என்கிறார் சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா, அப்படி உயிருடன் இல்லையாயின் அவர் எப்போது இறந்தார், அவ்வாறு இறந்துவிட்டார் எனில் அவரது உடலுக்கு என்ன நடந்தது என்பதை இன்றைய நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.

முன்னாள் இராணுவத் தளபதியான இந்நாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதி யுத்தம் நடைபெற்று அது முடிவுற்றதாக மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கும்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்ததாக இந்நாட்டின் அதிஉயர் சபையான பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதனை வெறுமனே அரசியல் கருத்தாக அல்லது பாராளுமன்ற உரையாக எடுத்தவிட முடியாது. இது மிகவும் பாரதூரமான விடயம். எனவே இது குறித்து அரசாங்கம் உண்மையான நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவர்களுள் ஒருவருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் எனக் கூறிய முன்னைய அரசாங்கம், அவர் எப்போது கொல்லப்பட்டார் மற்றும் அவரது சடலத்துக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இதுவரையும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இதனை நான் தனிப்பட்டமுறையில் கேட்டால், 'அது தேசிய பாதுகாப்பு விடயம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல்' என பதில் சொல்லமாட்டார்கள்.

அரசாங்கம் தன்னைத் தானே காப்பாற்றும் முயற்சிகளுக்கு நாங்கள் துணைபோகக்கூடாது.

'எனவே, அதனைக் கண்டு பிடிப்பது இன்றை அரசாங்கத்தின் பொறுப்பாகும். முன்னாள் தளபதி இப்போது இன்றைய அரசிற்கு பிரபாகரன் பற்றிய ஒரு துப்பைக் கொடுத்துள்ளார். அதனைத் தீர விசாரிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.