புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 

முழுமையான கல்விச் செயற்பாடுகளை வழங்கும் EDULINK

முழுமையான கல்விச் செயற்பாடுகளை வழங்கும் EDULINK

EDULINK ஆனது இலங்கையிலுள்ள மிகச் சிறந்த தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது மாறிவரும் உலகத்தின் சவால்களுக்கு அச்சமின்றி முகம்கொடுக்கக் கூடிய நபர்களாக மாணவர்களை உருவாக்கும் வண்ணம் அனைத்தையும் உள்ளடக்கிய கற்றலுக்கான சந்தர்ப்பத்தை வழங்கி வருகின்றது.

மேலும் ஐக்கிய இராச்சியத்தின் பிரசித்திபெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகளை வழங்குவதுடன், EDULINK மாணவர்கள் தங்கள் ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்து கொள்ள தேவையான கல்வி மற்றும் கல்விக்கு மேலதிகமான செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த EDULINK சர்வதேச கல்வி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி சபீஹா நிஹாட், “எந்தவொரு நேரத்திலும் சவால்களுக்கு முகக்கொடுத்து, பலர் இருக்கும் சபையில் தனித்து விளங்கக்கூடிய, தனித்திறமை வாய்ந்தநபர்களாக ஒவ்வொருவரையும் உருவாக்குவதே எமது நோக்கமாகும். கல்விசார் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மாணவர்கள் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் ஊடாக உளவியல், அறிவு, சமூக மற்றும் தொடர்பாடல் திறன் ஆகியவற்றை விருத்திசெய்து கொள்ளமுடியும். எனவே, இவ்வாறான செயற்பாடுகளில் எமது மாணவர்கள் அனைவரும் ஈடுபடுவதற்கான வழிகளை உருவாக்கி அவர்களை ஊக்குவித்களுக்கு சிறந்த அனுபவங்களை பெற்றுக்கொடுப்பதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.” என்றார்

EDULINK கிரிக்கட் அணியை உருவாக்கி உள்ளதன் மூலம் உயர்கல்வியை தொடரவிருக்கும் மாணவர்கள் தங்கள் மகத்தான திறமைகளை வெளிப்படுத்த வழிகளை திறந்துவிட்டுள்ளது. அத்துடன் EDULINK கூடைப்பந்தாட்ட அணியினர் உள்நாட்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், அணியில் அங்கம் வகிக்கும் ஒருசிலர் வெளிநாட்டில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளனர். மேலும் இங்கு கல்விகற்கும் மாணவர்களுக்கு இன்டநெட் ஊடான விளையாட்டுக்களிலும் பங்குபற்ற வசதிகள் உண்டு.

இதன் மற்றுமொரு செயற்பாடாக EDULINK மாணவர்கள் ரோட்டரிகழக உறுப்பினர்களாக அங்கத்துவம் வகிக்கமுடியும். இதனால் அவர்கள் நிகழ்ச்சி முகாமைத்துவம் மற்றும் மக்கள் தொடர்பாடல் திறன் ஆகிவற்றுக்கான அடிப்படைகளை கற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கின்றது. மேலும் ஒவ்வொருகல்வி ஆண்டிலும் டெலன்ட்ஷோ,கேள்விபதில் போட்டிகள், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக்கள் போன்ற பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் மாணவர்கள் தாமே ஒழுங்கு செய்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் பல்வேறு கோணங்களில் சிந்திக்கவும், செயல்திறனுடன் செயலாற்றவும்; கற்றுக் கொள்கின்றனர்.

மேலும் கருத்து தெரிவித்த சபீஹா நிஹாட், “மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே பல்வேறு விடயங்களில் ஈடுபடுவதன் மூலம் பேரம்பேசும் உத்திகள், குழுவாக இணைந்து பணியாற்றும் விதம், தொடர்பாடல் திறன்கள், நெருக்கடியான சூழல்களில் சிந்திக்கும் விதம், நேர முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை கையாளும் விதம் போன்ற சமூக திறன்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள். மேலும் உலகளாவிய ரீதியில் பல்வேறுபட்ட நபர்களுடன் தொடர்புகொள்ளவும் இணைந்து செயலாற்றவும் ஆற்றல் பெறுவதுடன், தொழில்சந்தையில் தங்களுக்கென தனித்துவமான உயர்ந்த இடங்களை அடையும் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.” என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.