புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 

2016 இல் மேலும் சிறந்த வெற்றியை எதிர்பார்க்கும் நோரிடாகே

2016 இல் மேலும் சிறந்த வெற்றியை எதிர்பார்க்கும் நோரிடாகே

நோரிடாகே லங்கா போர்பிசலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) நிறுவனமானது, பல்வேறு விருதுகளைப் பெற்ற வெற்றிக்கதையோடு 2015ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த மாதம் நடைபெற்ற ‘2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளுக்கான ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள்’ நிகழ்வில் ‘மட்பாண்ட மற்றும் கனிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகள்’ பிரிவின் கீழ் ‘மிகச் சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகளை பெற்றுக் கொண்டுள்ளது.

அதற்கு சில நாட்கள் முன்னதாக, தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2014’ நிகழ்வில் நோரிடாகே லங்கா போர்சலைன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ‘மிகப் பொிய உற்பத்தியாக்கல்’ பிரிவில் வெள்ளி விருதை தனதாக்கிக் கொண்டது.

இந் நிறுவனம், அதற்கு முன்னர் இடம்பெற்ற ‘தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகள்’ (NCE) நிகழ்வில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் ‘மிகப் பெரிய நிறுவன’ பிரிவிலே (கைத்தொழில் துறை) தங்க விருதொன்றை பெற்றுக் கொண்டதன் மூலம், மதிப்புமிக்க இவ்விருது வழங்கலின் முதன்னிலை வெற்றியாளர்களுள் ஒன்றாக வெற்றிவாகை சூடியது.

இதேவேளை, தேசிய வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்து நடாத்திய ‘தேசிய வர்த்தக சிறப்புத்துவ விருதுகள் 2015’ நிகழ்விலும் - இரசாயனங்கள், மட்பாண்டம் மற்றும் கண்ணாடி போன்ற உற்பத்திகளுக்காக துறைவாரியான விருதை நோரிடாகே லங்கா போர்பிசலைன் பிரைவேட் லிமிட்டெட் பெற்றிருந்தது.

நோரிடாகே லங்கா போா்சலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) நிறுவனத்தின் பிரதித் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான யொசினரி சிமாயா விருதுகளை பெற்றுக் கொண்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த வருடம் சிறந்ததொரு வருடமாக அமைந்தது. அவ் வருடம் பல்வேறுபட்ட பிரிவுகளின் கீழ் விருதுகளை எமக்கு பெற்றுத் தந்தது மட்டுமன்றி, பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளா்களையும் கொண்டு வந்தது. அவ் வருடத்தில் எமது இலாபமும் சிறந்த நிலையில் காணப்பட்டது. எம்முன்னே உள்ள இலக்குகள் சவால்மிக்கனவாக காணப்படுகின்ற நிலையில், இப் புதிய வருடத்திலும் மிகச் சிறப்பாக செயலாற்றுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்'.

சிலோன் செரமிக் கூட்டுத்தாபனம் மற்றும் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த ஜப்பானின் நோாிடாகே கொம்பனி லிமிட்டெட் ஆகிவற்றின் ஒரு கூட்டு முயற்சிக் கம்பனியாக 1972ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட NLPL ஆனது, இன்று இலங்கையின் முன்னோடி மேசைப் பீங்கான் (போர்பிசலைன்) பாத்திரங்கள் உற்பத்தி கம்பனியாக முக்கியத்துவமிக்க அந்தஸ்தை பெற்றிருக்கின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.