புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 

கார்பன் வாயுவை மிகக்குறைந்தளவில் வெளியேற்றும் இரண்டாவது விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்

கார்பன் வாயுவை மிகக்குறைந்தளவில் வெளியேற்றும் இரண்டாவது விமான சேவையாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்

ஆசியா மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கார்பன் வாயுவை ஆகக்குறைந்த அளவில் வெளியேற்றும் இரண்டாவது விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவையை பிரபல பிஸ்னஸ் ட்ரெவலர் சஞ்சிகை தெரிவு செய்துள்ளதையடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

ஆசியா மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியமானது விசாலனமானதொன்றாக விளங்குகிறது. இது மத்திய கிழக்கு, தெற்காசியா, தூர கிழக்கு மற்றும் ஆசிய பசுபிக் (அவுஸ்திரேலியா) ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த பிராந்தியத்தில் உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிஸ்னஸ் ட்ரெவலர் சஞ்சிகை (www.businesstraveller.com) தனது கணக்கெடுப்பில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 72.8 புள்ளிகளை வழங்கியுள்ள நிலையில் முதலிடத்தை பெற்ற தாய்வானின் ட்ரான்ஸ் ஏசியா விமான சேவைக்கு சிறிது அதிகமாக 73.4 புள்ளிகளை வழங்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது உலகில் கார்பன் வாயுவை குறைவாக வெளியேற்றும் விமான சேவை என்ற ரீதியில் ஸ்ரீலங்கன் விமான சேவை 17ஆவது இடத்தை பெற்றுள்ளது.

2009ஆம் ஆண்டளவில் கார்பனை குறைந்த அளவில் வெளியேற்றும் விமான சேவை என்பதில் ஸ்ரீலங்கன் விமான சேவை முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 'கிரக நட்புடன் கூடிய விமானப் பயணம்' (Planet friendly flyghts) என்ற தொனிப்பொருளை அறிமுகப்படுத்திய முதலாவது சேவையாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை இருந்தது.

கார்பன் வாயுவை குறைந்த அளவில் வெளியேற்றும் விடயத்தில் சீரான எரிபொருள் நிர்வாக முறையை ஸ்ரீலங்கன் விமான சேவை பின்பற்றுகிறது. ஒவ்வொரு விமானப் பயணத்தின்போதும் ஆகக் குறைந்தளவு எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்பது கண்காணிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு பயண முடிவை எட்டுவதற்கு மிகவும் கிட்டிய விமான வழியைப் பயன்படுத்துவது, தரையில் விமானத்தை இழுத்துச் செல்ல தனி இயந்திரத்தை பயன்படுத்துவது, பயணங்களின்போது பயணிகளுக்கு தேவைப்படும் உணவின் நிறையை தேவைப்படும் அளவுக்கு கட்டுப்படுத்தல், அவ்வாறே ஏனைய பொருட்களின் நிறையையும் கூடுமானவரை குறைத்தல், தேவைக்கேற்ற வகையில் குடிநீர்ப்பாவனை போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளின் எடையைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. சேவையில் உள்ள விமானங்களின் என்ஜின்கள் மிகவும் சிறப்பாக செயற்படும் வகையில் வைக்கப்படுகின்றன. விமானங்கள் அடிக்கடி கழுவி துப்பரவு செய்யப்படுகின்றன. இது காற்று உராய்வு மற்றும் பின்னிழுத்தலை குறைக்கிறது. அத்துடன் விமானிகள், பணியாளர்கள், விமானம் பயணமாவதற்கு உதவுவோர் மற்றும் விமானப் பயண செயற்பாட்டில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் உயர்மட்ட விழிப்புணர்வை பேணுகின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.