புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 

தேள்

தேள்

தேள் சிலந்தியுடன் சம்பந்தப்பட்டதாகும். நான்கு ஜோடி நடக்கும் கால்களும், ஒரு ஜோடி தினமான கத்தரிக்கோல் கைகளும், நீளமான சின்ன வாலும் உண்டு. கத்தரிக்கோல் கையால் அதற்குப் பலியாகவிருக்கும் பூச்சியைப் பிடித்துக் கொள்கின்றது. தேளின் வால் முனையில் வளைந்த கொடுக்கு உள்ளது. நச்சுச் சுரப்பியுடன் இந்தக் கொடுக்கு இணைக்கப்பட்டுள்ளது.

தேள் நடக்கும்போது அதன் உடலின் மேல் பகுதி வால் வளைந்தவாறு இருக்கும். கத்தரிக்கோல் போன்ற கரங்களால் பூச்சியைப் பிடித்து கொடுக்கை வளைத்துக் கொட்டுகின்றது. நஞ்சு பூச்சியைக் கொன்று விடுகிறது. அல்லது மரமரத்து உணர்வில்லாமல் செய்து விடுகின்றது. பகல் பொழுதில் இருள்நிறைந்த பகுதிகளில் கல்லின் அடிப்பகுதியில், மூலை முடுக்குகள், மரப்பட்டைகளில் மறைந்திருக்கும். இரவு நேரங்களிலேயே அதன் நடமாட்டம் எல்லாம்.

தேளில் 500 வகைகள் இருக்கின்றன. சின்னஞ்சிறு தேள் குட்டிகள் தாயின் முதுகில் ஏறிப் பயணம் செய்வதுண்டு. ஒரு சென்றி மீற்றரிலிருந்து 17 செ.மீ வரை அளவுகள் காணப்படுகின்றன. இதில் டியூரங்கோ எனும் தேள் கொட்டினால் ஒரு மணி நேரத்தில் மனிதன் மரணத்தை தழுவிவிடும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். டியூரங்கோ தேள் மெக்சிகோவில் அதிகளவில் காணப்படுகிறது. 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.