புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 

திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி பயிற்சி அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள சம்சுங்

திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி பயிற்சி அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள சம்சுங்

சம்;சுங் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை இலங்கையில் அமைப்பது தொடர்பில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்கல்வி பயிற்சி அமைச்சுடன் வணிக நிறுவன விதித் தொகுப்பு புரிந்துணர்வு உடன்படிக் கையில் (ஆழயு) இலங்கை சம்சுங் எலக்ரோனிக்ஸ் நிறுவனமானது கைச் சாத்திட்டுள்ளது. இலங்கை சம்சங் இன் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. யங்மின் 'pன் மற்றும் இல ங்கை தொழில்கல்வி பயிற்சி அதி காரசபையின் தலைவர் / பிரதம நிறை வேற்று அதிகாரி கலாநிதி லயனல் பின்டோ ஆகியோர் இந்த ஆழயுஇல் கைச்சாத்திட்டனர். வெயா ங்கொடை, பண்டாரநாயக்க மாவத் தையில் அமைந்துள்ள தொழில் கல்வி பயிற்சி அதிகார சபையில் முதலாவது ஆய்வுகூடம் அமைக் கப்பட்டு, ஏனைய பயிற்சி நிலை யங்களிலும் தொடர்ச்சியாக அமைக் கப்படவுள்ளது.

அரசாங்க அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கற்கையில் இணைந்து கொண்டுள்ள, தொழில்கல்வி பயிற்சி அதிகாரசபையின் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், முழுமை யான பயிற்சி நிகழ்ச்சிகளை சம்சுங் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வழங்கும். சம்சுங் இனால் வழங்கப்படும் நுகர் வோர் இலத்திரனியல் துறை தொ டர்பான விசேட நிகழ்ச்சி குறித்து இலக்கு வைக்கும் ஆய்வுகூடமானது, மாணவர்கள் மேலதிக திறன்கள் மற்றும் அறிவினைப் பெற்றுக் கொ ள்ள உதவும். குளிர்சாதனப் பெட்டி கள்,சலவை இயந்திரங்கள், மைக் ரோவேவ் இயந்திரங்கள், குளி ரூட்டிகள், ஒலி/ஒளி சாதனக் கருவி கள், தொலைக்காட்சிகள், கைபே சிகள் மற்றும் வேறு இலத்திரனியல் உபகரணங்களினை எவ்வாறு திருத் துவது மற்றும் பராமரிப்பது என்பது தொடர்பான ஆழமான அறிவினை சம்சுங் இன் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் மாண வர்களுக்கு வழங்குவர். நுகர்வோர் இலத்திரனியல் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புச் சந்தர்ப் பங்களைப் பெற்றுக் கொள்வதற்கு, மாணவர்கள் இங்கு பெறும் கொ ள்கை மற்றும் பிரயோக அறிவானது துணை புரியும்.

"இலங்கையில் சம்சுங் ஆனது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி யுள்ளதுடன், சிறந்த சந்தை விரிவா க்கத்தையும் அடைந்துள்ளது. எவ்வா றாயினும், முன்னணி நிறுவனம் என்ற வகையில் உள்ள சமூகத்தின் தேவைகளுக்கு ஆதரவளிப்பதன் ஊடாக நாம் எமது சமூக பொறுப் புக்களையும் பூர்த்தி செய்தல் வேண்டும். சம்சங் தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஊடாக மாணவர்க ளுக்கு உலகத்தரமான தொழில் கல்வி பயிற்சியை வழங்குவதுடன், உயர்தரமான தொழில் நுட்பவியலா ளர்களாகவும், பொறியியலாளர்க ளாகவும் மாறுவதற்கான திறன்களை யும் நாம் அவர்களுக்கு வழங்கு கின்றோம். இந்த திட்டத்தை ஆரம் பிப்பதற்கு எமக்கு சந்தர்ப்பமளித்த திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொ ழில்கல்வி பயிற்சி அமைச்சுக்கு எனது நன்றி களைத் தெரிவிக்க விரு ம்புகின்றேன்.

நுகர்வோர் இலத்திர னியல் தொழில்துறையில் வேலை வாய்ப் பினை எதிர்பார்த்துள்ள மாண வர்களுக்கு, சிறந்த தொழில் வகிபா கங்களுக்கு பயிற்சியை வழங்கு வதற்கு எமது இந்த இணைப்பு துணைபுரியும் என நான் நம்புகின் றேன்" என இலங்கை சம்சுங் இன் முகாமைத்துவப் பணிப்பாளர் யங்மின் கூறினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.