புத் 67 இல. 47

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09

SUNDAY NOVEMBER 22 2015

 

 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ர்ளுடீஊ  சிங்கர்; பிரத்தியேகமான கூட்டிணைவு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு HSBC  சிங்கர்; பிரத்தியேகமான கூட்டிணைவு

நாட்டில் நுகர்வோர் சாதனங்களை விற்பனை செய்வதில் மிகப் பாரிய தொழிற்பாட்டாளராகத் திகழும் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, ர்ளுடீஊ கடனட்டை வாடிக்கை யாளர்களுக்கு 2015 டிசம்பர் 31 வரை தனது அனைத்து உற்பத்தி வரிசைகளிலும் பண்டிகைக் கால தள்ளுபடிகள் மற்றும் 0% வட்டியின்றிய கொள்வனவுத் திட்டங்களை வழங்கும் பொருட்டு HSBC உடன் பிரத்தியேகமான பங்குடமையொன்றை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

பல்வேறு வகைப்பட்ட நுகர்வோர் இலத்திரனியல் உற்பத்திகள், மின்னியல் சாதனங்கள், தளபாடங்கள் மற்றும் ஏராளமான வீட்டுப் பாவனைப் பொருட்கள் என அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் HSBC வாடிக் கையாளர்கள் கொள்வனவு செய்ய முடியும். இவை அனைத்தும் சிங்கரின் நாடளாவிய ரீதியிலான வலைய மைப்பின் கீழ் Samsung, Hitachi, Beko, Sharp, Singer, SISIL, SONY, Tefal, Moulinex, Philips, DELL மற்றும் பல பிரபலமான சர்வதேச வர்த்தக நாமங்களில் கிடைக்கப் பெறுகின்றன.

இந்த வகையில் சிங்கர் பிளஸ், சிங்கர் மெகா, சிசில் வேர்ல்ட் மற்றும் சிங்கர் ஹோம்ஸ் காட்சியறைகளில் சிங்கரின் இணையற்ற உத்தரவாதம் மற்றும் அதன் பிரத்தியேகமான நாடளா வியரீதியிலான விற்பனை க்குப் பின்னரான சேவை ஆகியவற்றுடன் இந்த பண்டிகைக்கால தள்ளு படிகளை வாடிக்கையா ளர்கள் தற்போது பெற்று அனுபவிக்க முடியும்.

சிங்கர் கொண்டுள்ள பல்வேறு வர்த்தக நாமங்களின் கீழான உற்பத்தி வரிசை மற்றும் எங்கும் பரவியுள்ள விசாலமான விற்பனை வலையமைப்பு ஆகியவற்றின் காரணமாக சிங்கர் அனைத்து இல ங்கை மக்கள் மத்தியி லும் விரும்பப்படும் தெரிவாக மாறியுள்ளது.

சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகத்துறை பணிப்பாளரான மகேஷ் வஜேவர்த்தன விளக்குகையில், "எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்குவதும், இலகுவில் கொள்வனவு செய்ய வழிகோலும் சலுகைகளும் சில்லறை வியாபாரத் துறையில் நாம் தலைமைத்துவ ஸ்தானத்தில் திகழ் வதற்கான இரு முக்கிய அம்சங்களாகும். இதுவே மிக நீண்ட காலமாக எமது தொழிற்பாடுகளில் பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கிவந்துள்ள உறுதிமொழியாகவும் அமைந்துள்ளது" என்றார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், HSBC இணைப் போன்ற முன்னணி வர்த்தகநாமம் ஒன்றுடன் பிரத்தி யேகமான ஊக்குவிப்பு ஒன்றை ஒன்றிணைந்து அறிமு கப்படுத்துவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந் துள்ளோம்.

மிகவும் ஆவலுடனும், எதிர்பார்ப்புக்களுடனும் களை கட்டும் பண்டிகைக் காலத்தில் HSBC கடனட்டை வாடிக் கையாளர்கள் ஏராளமான வீட்டுப்பாவனைப் பொருட் களை கொள்வனவு செய்யும் வாய்ப்பினை இந்த சலுகை அவர்களுக்கு வழங்குகின்றது" என்று குறிப்பிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.