புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 

ஸ்மார்ட் நகரங்கள் இலங்கையின் தனித்துவமான முயற்சியா?

ஸ்மார்ட் நகரங்கள் இலங்கையின் தனித்துவமான முயற்சியா?

Lamudi இலங்கையில் ஸ்மார்ட் நகர ங்கள் தொடர்பாக ஆராய்கின்றது Lamudi  இலங்கை கண்டி நகரை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை இலங்கை அரசாங்கம் அறிவி த்திருக்கின்றது.

ஸ்மார்ட் நகரம் என்ற சொற்பிரயோக மானது கையடக்க தொலைபேசி துறை யில் பல நவீன புரட்சிகளை நிகழ்த்தி வரும் ஸ்மார்ட் தொலைபேசிகள் வடிவில் அமைந்த ஒன்றாகும். எவ்வாறு தொலைபேசிகள் முழு உலகையும் ஒவ் வொருவரின் விரல் நுணியிலும் கொண்டு வந்ததோ, அதேபோன்று நவீன நகரம் ஒன்றிற்கான அனைத்து தேவைகளையும் காலடியில் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்படும் நகரமானது கண்டி நகரின் வளங்கள், நிர்வாகம், பொரு ளாதார அபிவிருத்தி, சுகாதாரத்துறை, சு+ழலியல் காரணிகளின் மேம்பாடுகளை மையமாக கொண்டு கட்டியமைக்கப்பட இருக்கின்றது.

ஆவணங்கள், பணம் மற்றும் தொலை பேசி வசதிகள் மூலம் இயங்கும் பாரம்பரிய முறைகளில் இருந்து நவீன தொழில்நுட்ப முறைகளுக்கு மாற்றிய மைப்பதே இதன் நோக்கமாகும். நகரின் சனத்தொகை பரம்பல் தொடக்கம் ஆதன உரிமை விபரங்கள் வரை டிஜpடல் முறையில் அமைப்பதன் மூலம் முன்னர் இருந்ததைவிட மிக இலகுவாக கருமங்களை ஆற்ற முடிவதுடன் தொடர்பாடல் வசதிகளையும் மேம்படு த்த முடியும்.

Lamudi இலங்கையின் முகாமைத் துவப் பணிப்பாளர் Hugh van der Kolff கருத்து வெளியிடுகையில்: "கண்டியை ஸ்மார்ட் நகரமாக மாற்றும் திட்டமானது மிகவும் பயனுள்ள ஒரு விடயமாகும். இணைய வசதிகள், கையடக்க தொலைபேசி பாவணை மற்றும் டிஜpட ;டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி போன்றன துரித பரிமாற்றங்களையே குறித்து நிற்கின்றது. கண்டி, காலி, கொழும்பு போன்ற நகரங்களை குறித்த முறையில் அபிவிருத்தி செய்வதானது தற்காலத்தில் பாரிய நன்மைகள் ஈட்டக ;கூடியன. மேலும் நிலபுலங்களுக்கான கேள்விகளும் இப்பிரதேசங்களில் அதிகரிப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது." இன்று இலங்கை, நிலபுல துறை மற்றும் தொழில்நுட்பம் என இரு துறை களில் வளர்ச்சியடைந்து வருகின்றது. கூகுள் பலூன் திட்டத்தின் மூலம் ஆசியாவின் ஆச்சரியமான இலங்கை மேலும் அதிகளவான இணைய பரம்பலை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.