புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 

சிகரட் கம்பனியின் வரி மோசடி தொடர்பாக நீர் அறிந்ததுண்டா?

சிகரட் கம்பனியின் வரி மோசடி தொடர்பாக நீர் அறிந்ததுண்டா?

ஆய்விற்கேற்ப சம்பா அரிசி, தேங்காய், பருப்பு, முட்டை ஆகிய பொருட்களின் விலையேற்றத்துடன் ஒப்பிடும்போது சிகரட்டிற்கான விலை அதிகரிப்பு மிகக் குறைந்த அளவிலேயே இடம்பெற்றுள்ளது. தனிநபரின் வருமானம் மற்றும் ஏனைய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றோடு ஒப்பிடும்போது சிகரட் வகைகளின் விலை 50 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது முறையான முறையில் விலையேற்றம் இடம்பெற்றிருந்தால் 2011 ஆம் ஆண்டில் ஜோன் பிளேயர் சிகரட் ஒன்றின் விலை ரூ.29 ஆக இருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட ஆண்டில் ரூ.23 ஆகவே இருந்தது. இதனால் அரசுக்கு 1 சிகரட்டிலிருந்து கிடைக்க வேண்டிய ரூபா. 6 வரிமுதல் கிடைக்காமல் போனது இதனால் இலங்கை அரசுக்கு 16 பில்லியன் மேலதிகமாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த சந்தர்ப்பமும் பரிபோனது.

2005-2011 ஆம் ஆண்டு வரை மொத்தமாக 100 பில்லியன் மேலதிக வரித்தொகை இழக்கப்பட்டமை அரசுக்கு மிகப்பெரிய இழப்பாகும். காரணம் 1971-1996 மகாவலி அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு 73 பில்லியன்களாகும். 2011 ஆம் ஆண்டு ஓய்வு+தியத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 98 பில்லியன் 2011 ஆம் ஆண்டு சலுகை அடிப்படையிலான உரக் கொடுப்பனவு 20 பில்லியன் 2011 சமூர்த்திக் கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 9 பில்லியன் ஆகும். எனவே சிகரட்டினால் கிடைக்கக்கூடியத வரித்தொகை ஒழுங்கான முறையில் கிடைத்திருந்தால் மேற்குறிப்பிட்ட செயற்றிட்டங்களைப் போன்று பல்வேறு செயற்றிட்டங் களை நடைமுறைப்படுத்தியிருக்கலாம்.

அரசுக்கு அதிகமாக வரி கிடைப்பது சிகரட் கம்பனியிடமிருந்து என்றே பலர் நினைத்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் சிகரட்டின் மூலம் கிடைக்கும் வரி 13 சதவீதம் மட்டுமே ஆகும் ஊடகங்கள் சாராயம் பியர் மற்றும் சிகரட் மற்றும் பியர் பாவனையை ஊக்குவிப்பதில் ஊடகங்கள் சிக்கி தவிக்கின்றன

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.