புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 
சம்பந்தனுக்கு சகல கட்சிகளும் வாழ்த்து

சம்பந்தனுக்கு சகல கட்சிகளும் வாழ்த்து

எதிர்க் கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் தலைவர்களுமே தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த கால பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் முன்னொருபோதும் இடம்பெறாதவாறு இந்நிகழ்வு அமைந்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உட்பட பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தொழி லாளர் தேசிய சங்கம் என்பவற்றின் தலைவர்கள் நேரடியாகவே தமது வாழ்த்துக்களை அவருக்குச் சபையில் வைத்துத் தெரி வித்துள்ளனர்.

இக்கட்சிகள் தவிர பாரளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளும் கூட அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரி வித்துள்ளன. அத்துடன் வெளிநாடுகளி லிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.