புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 

பதவி, அந்தஸ்து, சலுகை, வசதி வாய்ப்புகளுக்கு சோரம் போகிறவர்கள் அல்லர் நாம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கி சம்பந்தன் வாயை அடைக்க முடியாது

தமிழர் தீர்வு வேறு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேறு: இரண்டிற்கும் முடிச்சு போட வேண்டாம்

எனக்கு வழங்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எனும் உயர்ந்த பதவிக்கு உரிய கெளரவ மளித்து இன, மத, மொழி, கட்சி வேறு பாடுகள் எதுவுமின்றி நாட்டு மக்களது நலன் களுக்கு அதி முக்கியத்துவம் அளித்துச் செயற் படுவேன் என்பதை நான் பாராளுமன்றத்தில் வைத்துத் தெளிவாகத் தெரிவித்துள்ளேன். அதேவேளை தமிழ் மக்களைப் பிரதிநிதித்து வப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எனும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒருபுறம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மறு புறம். இரண்டும் ஒரே இலக்கைக் கொண்டது. எனினும் எவரும் இவை இரண்டையும் வைத்து எனது பணிகளுக்கு தமது இஸ்டப்படி முடிச்சு போடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருப்பதனாலேயே எனக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ளது என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவி இல் லாமற் போய்விடவில்லை. இதனை இன்னமும் பலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

விவரம்

சிரியாவில் இருந்து துருக்கி வழியாக கிரீஸ் நாட்டுக்கு அகதியாக சென்ற போது படகு கவிழ்ந்து பலியான குழந்தை ஐலனின் உடல், அவனது தாய், சகோதரனின் உடலுடன் அவர்களின் சொந்த ஊரில் அடக்கம் செய் யப்பட்டது. சிரியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புகுவதற்காக, இலட் சக்கணக்கான அகதிகள் கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர். (தொடர் பக். 04)

பொய் கூறுகிறார் கருணா இராணுவ அதிகாரிகள் மறுப்பு

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக வி. முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று இராணுவ உயரதிகாரிகள் பலரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி

விவரம்»

ஊடகவியலாளர்கள் உண்மையை மட்டுமே செய்தியாக்க வேண்டும்

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக

ஊடகவியலாளர்கள் உண்மையை மட்டும் செய்தி அறிக்கையிட வேண்டுமென ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். மீளவும் ஊடக அமைச்சர் பதவியை

 விவரம்»

நாட்டில் ஜனநாயகம்தான் மலர்ந்திருக்கிறதே தவிர தமிழ் மக்களுக்கு எதுவுமே நடக்கவில்லையாம்

அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களிடம் கவலை வெளியிட்ட சீ.வி

நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். யாழிற்கு வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட குழுவினர்  . . . .

விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.