புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

நிகழ்ச்சி ஏற்பாடுகளில் புரட்சி செய்த ஒரு சோர்விலான்

நிகழ்ச்சி ஏற்பாடுகளில் புரட்சி செய்த ஒரு சோர்விலான்

1970களில் மலையகத்திலும் நாட்டின் முக்கிய பகுதிகளிலும் கலை கலாசார நிகழ்ச்சிகள் அதிகமதிகமாகவே அரங்கேறியிருந்தன. தலை நகரக் கலைஞர்கள் மலையகத்துக்கும் மலையக கலை ஞர்கள் தலைநகரத்துக்கும் அழைக்கப்பட்டு மேடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. எங் கெங்கிருந்தோ படைப்பிலக்கியவாதிகள், ஊடகத் துறை யினர், கலைஞர்கள் ஒன்றியணைக்கப்பட்டு அரங்கங்கள் அதிர்ந்தன.

இத்தனை கைங்கரியங்களையும் அழகாக செய்து விட்டு மற்றவர்களை மேடை ஏற்றி அவர்கள் கெளர வம் பெறும்போது ஓரமாக நின்று பார்த்து புள காங்கிதமடைந்த ஒருவர்தான் பத்திரிகையாளர் தேவதாஸ் சவரிமுத்து.

புன்னகை பூத்த முகம், மென்மையான சுபாவம், எதனையும் சகித்து சுதாரித்துக் கொள்ளும் போக்கு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என அவருக் கென்று சிறப்பான முத்திரை இருக்கிறது. தினகரன் பத்திரிகையில் அமரர். இ. சிவகுருநாதன் பிர தம ஆசிரியராக இருந்தக் காலம். புதிய படைப் பாளிகள் புடைசூழும் பாசறையாக கலகலக்கும் பணிமனை.

பல்துறை வல்லுனர்கள் பரிச்சயமாவது இங்கு தான். ஆளுக்காள் அறிமுகங்கள் அரங்கேறும். அண் ணன் அந்தனி ஜீவா இவர், இவர்தான் திருமதி லீலா இராமையா, இவர் தான் (அமரர்) இ.வே சுப் பிரமணியம், இவர் ஜனாப் என். எம். அமீன், இவர் தான் கலையன்பன் ரபீக் என்று அடையாளப் படுத்திக் காட்டும் போது அவர் குரலில் மிதக்கும் உற்சாகம் அலாதி.

பன்முக படைப்பிலக்கியவாதிகளான கலைவாதி கலீல், அமரர் ஏ.பி.வி.கோமஸ், அமரர் சாரல்நாடன் கு. இராமச்சந்திரன், ஈழகணேஷ், குறிஞ்சி பாலன், அமரர் குறிஞ்சித் தென்னவன், மலரன்பன், மாத்தளை வடிவேலன், மொழிவரதன், சு. முரZதரன், அமரர் தேவதாசன் ஜெயசிங், பலாங்கொடை பன். பாலா, மல்லிகை சி. குமார். போன்றவர்களை எல்லாம் ஒரே மேடைக்குள் கொண்டுவருவதில் வெற்றிக் கண்டிருந்தார்.

அன்று பிரபல்யமாகவிருந்த மரிக்கார் ராமதாஸ் உள்ளிட்ட “கோமாளிகள்” கலைக் குழுவினர், பிரபல அறிவிப்பாளர்களான பி.எச். அப்துல் ஹமீத், கே. எஸ். ராஜா போன்றவர்களை மலையக மேடைகளில் ஏற்றி வைத்து திருப்தி கண்டவர் தேவ தாஸ் சவரிமுத்து. இவரின் பணிவான நடத்தையும் எடுத்த காரியத்தை முடிக்கும் துடிப்புமே பல்துறைக் கலைஞர்களையும் தன்பால் உள்Zர்த்துக் கொள்ள காரணமாய் அமைந்தது. எவருமே தேவதாஸ் சவரிமுத்துவின் அழைப்பை மறுதலிக்க முன் வராமையே அவரின் பலமாகவிருந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடு என்றால் கூப்பிடுங்கள் தேவ தாஸை என்று சொல்லுமளவுக்கு அவரின் ஆளுமை மேலோங்கியிருந்தது. ‘தினகரன்’ பொன்விழாவை புவக்பிட்டிய சீ.சீ. தமிழ் வித்தியாலயத்தில் அவர் ஒழுங்கமைத்திருந்தச் சிறப்பை அமரர் இ. சிவ குருநாதன் மனம் திறந்து பாராட்டியது இன்னும் என் மனப்பதிவில் அப்படியே இருக்கிறது. எட்டியாந்தோட்டை பெரகொட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அவர் ஏற்பாடு செய்திருந்த ‘குறிஞ்சி விழா’ குறிப்புக்குள் வர வேண்டிய பெருமை பெற்றது.

வண. பிதா போல் கெஸ்பஸ் (சத்தியோதயம்) வண. பிதா. இமானுவேல் (செடக்), வண. பிதா. ஜெப்ரி அபேசேகர, வண. பிதா தம்புசாமி போன்ற மதப்பணியாளர்களை எல்லாம் கலை, கலாசார மேடைகளுக்கு அழைத்துவந்து அலங்கரிப் புச் செய்திருக்கிறார். அமரர் பாலாதம்பு, வி.எல். பெரேரா, ‘குமரன்’ ஆசிரியர் செ. கணேசலிங்கன் போன்ற இடதுசாரி கொள்கையாளர்களுடன் தொடர்பினை வைத்திருந்தார். ‘மலைமடல்’, ‘தாக் கம்’ போன்ற பத்திரிகைகளுக்கு பிரதம செய்தி யாளராகவும், ‘தினகரனு’க்கு உத்தியோகப்பற்றற்ற ரீதியில் செய்திகளையும் தகவல்களையும் தருப வராகவும் விளங்கினார். மலைவாணன் தேவதாஸ் என்றால் அக்காலத்தில் பிரசித்தம். அமரர் அதி பர் பி. சீனிவாசகத்தின் ஆலோசனைகள் இவ ருக்குப் பெரிதும் உதவியதாக இவரே குறிப்பிட்டி ருந்தார்.

குறிஞ்சி விழா, பொங்கல் விழா, கலைஞர் சங்கமம், இலக்கிய சந்திப்பு, நூல் அறிமுகம், நடன, நாடக அரங்கேற்றம், இசை விருந்து, கருத் தரங்குகள், செயலமர்வுகள், பயிற்சிப் பட்டறைகள், இலக்கிய மாநாடுகள், ஆய்வு களங்கள் என எல்லா அம்சங்களிலும் இவரது ஏற்பாடுகளின் தனித்துவம் பரிணமிக்கவே செய்தது. ஒழுங்கமைப் பும் நெறியாள்கையும் திறமையான ஒரு ஏற்பாட்டா ளராக இவரை வெளிச்சம் போட்டுக் காட்டின.

நுவரெலியா, கண்டி, பதுளை, கேகாலை, கொழும்பு போன்ற மாவட்டங்களில் இவரது பங்களிப்புகள் தாராளமாகவே வியாபித்திருந்தன. ஊடகத்துறையில் நல்ல ஞானம் அவருக்குண்டு. அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மீது அன்பும் மதிப்பும் கொண்ட இவர், 1990களில் இ. தொ. கா வோடு தன்னை இணைத்துக் கொண்டு ‘காங்கிரஸ்’ இதழின் ஆசிரியராக திகழ்கிறார். விட்டுக் கொடுக் கும் மனப்பான்மை, நட்புக்குக் கொடுக்கும் மதிப்பு, நன்றி மறவாமை, சகிப்புத்தன்மை போன்ற நல்ல பல குணவியல்புகளைக் கொண்ட இவர் கடந்த 13.08.2015 அன்று அகவை 54 இல் காலடி எடுத்து வைத்துள்ளார். செயலாற்றல் மிக்க கலைஞர் தேவதாஸ் சவரிமுத்து. நண்பர்களிடையேயும் அறிந்தவர்களிடையேயும் அவருக்கு எப்பொழுதுமே நல்ல பெயர் உண்டு. அது தான் இதுவரை அவர் சேமித்த சொத்து. தற்போது கிறிஸ்தவ ஆன்மீகப் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். கலை, கலாசார ஆன்மீக சேவைகள் தொடர வாழ்த்துகிறோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.