புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 

வீடுகட்ட 20 பேர்ச்சஸ் காணி கோரிக்கை சாத்தியமா?

வீடுகட்ட 20 பேர்ச்சஸ் காணி கோரிக்கை சாத்தியமா?

தோட்டத் தொழிலாளருக்கு 20 பேர்ச் சஸ் வீதம் காணி வழங்கப்பட வேண்டும் என நண்பர் ஜி.ணி லிங்கம் ஜூன் 28ம் தினகரன் வாரமஞ்சரியில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். ஒரு னிமிலி நோர்வூட்டில் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி நடாத் திய ஆர்ப்பாட்டத்தை அடிப்படையாக கொண்டு மேற்படி கட்டுரையை அவர் எழுதி இருந்தார்.

தொழிலாளருக்கும் நிலம் வேண்டும் என்பது நல்லதுதான். ஆனால் இது தேயிலை, ரப்பர் பயிர்ச்செய்யும் நிலத்தில் சாத்தியமா என்பது தான் கேள்வி.

ஏனெனில் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் நிரந்தரமாகவும், அமையத் தொழிலாளராகவும் 10 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். பெருமளவு நிலத்தை கூறுபோட் டுக் கொண்டு போகையில் மேற்படி பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டு பெருமளவு தொழி லாளர் வேலை இழக்கநேரிடும் அவ்வாறு நேர்கையில் இவர்கள் வருமானத்திற்கு எங்கு போவது? அவர்களை வீதிக்கு விரட்டக் கூடாது.

பெருந்தோட்ட விவசாய உற்பத்தி பாதிக்கக் கூடாது எனக் கூறியே முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ 50 ஆயிரம் மாடி வீடு கட்டித் தரு வேன் என்றார். இ.தொ.கா தான் இதற்கு முன் மாதிரியை காட்டியது. இதற்கு ஏனைய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை காட்டின.

கட்டுரையாளர் சில காணிச் சட்டங்களைச் சுட்டிக் காட்டினார். 37 ஆயிரம் ஹெக்டயர் நிலத்தை தரிசு நிலம் என முன்னைய அரசு அடையாளங் கண்டதாகவும் அவற்றில் 20 பேர்ச் வீதம் கொடுக்கலாம் எனவும் கூறினார். இங்கு தரிசு நிலம் என்பதெல்லாம் வெறும் கற்பனை. தோட்ட நிலத்தை கையகம்படுத்தி பெரும்பான்மை சமூகத்தை குடியேற்ற வேண்டும். மற்றும் சொந்த பந்தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே உள்நோக்கம்.

முன்னாள் ஜனாதிபதிதான் தொழிலாளருக்கு 50 ஆயிரம் வீடுகளை - அதுவும் மாடி வீடு களை கட்டித்தர பட்ஜட்டில் முன் மொழிந்தார். ஒரு பக்கம் தரிசு நிலம் என்று கூறிக்கொண்டு, மறுபுறம் நிலப் பற்றாக்குறை, மாடி வீடுதான் கட்டித் தருவேன் என்பது ஒன்றுக் கொன்று முரணானது. இதற்கு நம்மவர்களும் துணை போனதுதான் கொடுமை.

லயன்களில் வாழ்ந்து வந்த தொழிலாளருக்கு தனித்தனி வீடுகட்டி வாழ காணி கொடுத்தது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆவார். 5 முதல் 7 பேர்ச் காணியும் ரூபா 30,000/= வங்கிக் கடனும் வழங்கப்படும் என அவர் கூறினார். ரிஜிபி ஐ பிணையாக வைத்து கடன் வழங்கு வதை காங்கிரஸ் எதிர்த்தது. நடைமுறை சிக்கல் ஏற்படவே சந்திரிக்காவின் பணிப்பின் பேரில் அமைச்சர் அத்தாவுத செனவிரட்ன ஹட்டன் விதீபி இல் நடந்த ஒரு விளக்கக் கூட்டத்தில் (இதில் மலையக தொழிற்சங்க வாதிகள், சிவில் அமைப்பினர் கலந்து கொண்டனர்) இத்திட்டத்தின் நன்மைகளை தெளிவுபடுத்தினார். இதன்பின்னர் தொழிலாளர் இதனை ஏற்றுக் கொண்டனர்.

இதன் அடிப்படையில் கட்டபுளா, கொலபத்தனை தோட்டத்தில் 5 பேர்ச்சஸ் நிலத்தில் ஒரு வீடமைப்பு திட்டம் உருவானது. ஏனைய இடங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

தேயிலை, இரப்பர் தோட்டங்களை 23 கம் பனிகள் 99 வருட குத்தகையில் எடுத்து நடாத்துகின்றன. இங்கு 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர் நேரடியாகவும், மறை முகமாகவும் பிழைப்பு நடாத்துகின்றனர். இவர் களின் வாழ்வாதாரத்தை அழித்து விடுவதா? ஏற்கனவே அரசாங்கம் சிறு தேயிலை பயிர்ச் செய்கையாளர்களை பல சலுகைகளைச் செய்து ஊக்குவித்து வருகிறது. இன்று கம்பனிகளின் தேயிலை உற்பத்தி 2ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஏற்கனவே தோட்டது இளைஞர் சமூகம் வேலை வாய்ப்பின்றி கொழும்பு மற்றும் நகரங்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலை யில் உள்ளதையும் கெடுத்துக் கொள்வதா? சிந்திக்க வேண்டும்.

தற்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 7 பேர்ச்சஸ் காணி வழங்க அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ப. திகாம்பரத்தின் மூலமாக 400 வீடுகளும் கட்டப்பட்டு விட்டன. இது தோட்ட உத்தியோகத் தர் உட்பட ஏனைய சமூகத்திற்கு விஸ்தரிக்கப் படும் என முன்னாள் அமைச்சர் வேலாயுதம் கூறியுள்ளார். இதனை வரவேற்பதே நல்லது. குட்டையை குழப்பக் கூடாது; தொழிலாளரை வீதிக்கு விரட்டக் கூடாது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.