புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 
பலதும் பத்தும்

பூமியில் விழுந்த தேவதை

சில வாரங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பறக்கும் மனிதர்கள் வானத்துல வட்டம் இடுறதா வெளியான பரபரப்பு வீடியோ, வைரல் ஆனது தெரிஞ்ச விஷயம்தான். அதே மாதிரி லண்டனில் நடந்திருக்கு இரு சம்பவம். வெள்ளை வெளேர் உடையும், சுருக்கம் விழுந்த முகமும் கொண்ட வயதான ஒரு பறக்கும் தேவதை பொத்துனு லண்டன் தெருவுல இருந்த ஒரு கூண்டுக்குள்ள விழுந்திருக்கு.

அவ்வளவுதான். பதறியடிச்சுப் பல பேர் ஓட, என்னம்மா அங்க சத்தம்னு கேட்டா சில பேர் பக்கத்துல போய்ப் பார்த்திருக்காங்க. அட, நிஜமாவே ஒரு பறக்கும் தேவதை ஸாரி மூத்த தேவதை. அவ்ளோதான். ஆளாளுக்குப் போட்டி போட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், லண்டனில் இருக்கும் சில பூம் பூம் பூச்சாண்டிகள். போச்சு போச்சு மனித இனம் பூமியில் வாழும் தகுதியை இழந்துவிட்டது. அதுக்கான அறிகுறிதான் இது என கேப்பில் கிடா வெட்டியிருக்கிறார்கள்.

கடைசியில் தான் தெரிந்தது சீனாவைச் சேர்ந்த சன் யுவாங், பெங்யூ என்ற இருவர் சேர்ந்து வடிவமைத்து செயற்கையான உருவம் தான் அது என்று. கலைக்கும் இயற்கைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்பதை உணர்த்த பல ஆண்டுகளாக இவர்கள் உழைத்து உருவாக்கியது தான் இந்த வயதான தேவதைக்கும், சாதாரண மனுஷிக்குமான வித்தியாசம். மற்றபடி, உடலமைப்பு, தத்ரூபமான முடிகள், அத்தனை கச்சிதமாகக் காணப்படும் இறக்கைகள் என எல்லாமே ஆஸம். தங்கள் திறமையைக் காட்ட, அடிக்கடி பல நாடுகளுக்கு டிரிப் அடிக்கும் சன் யுவாங்கிற்கும், பெங் யூவிற்கும் புராணங்களில் கேள்விப்பட்ட வித்தியாசமான உருவங்களை, அச்சு அசலாக செயற்கையில் கொண்டுவருவதுதான் ஹாபியாம்!

உலகின் இராட்சத விமானம் பரீட்சார்த்த பறப்பில் ஈடுபடவுள்ளது

உலகிலேயே மிகவும் பிரம்மாண்ட விமானமாக Stratolaunch எனும் விமா னம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

இவ் விமானம் 2016ஆம் ஆண்டில் முதன் முறையாக பரீட்சார்த்த பறப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த விமானமானது மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுன ராக Paul Allen  என்பவரால் Tesla மற்றும் Space X CEO Elon Musk போன்ற சில நிறுவனங்களுடன் இணைந்து வடிவமைக் கப்படுகின்றது. இரண்டு Boeing 747 ரக விமானங்களை இணைத்து உருவாக்கப்பட்டுவரும் இந்த விமானமானது இறக்கைகளுக்கு இடையில் 385 அடிகள் நீளமுடைய தாகவும், இதன் பறப்பிற்கு 12,000 அடிகள் நீளமான ஓடுபாதை அவசியமானதாகவும் காணப்படுகின்றது.

மேலும் 1.3 பவுண்ட்ஸ் எடை கொண்ட இந்த விமானம் ரொக்கெட்களை விண்ணில் இலகுவாக செலுத்துவதற்கே அதிகளவில் பயன்படுத்தப்படவுள்ளது.

வாழ்வா? சாவா? போராட்டம்: கையை பறிகொடுத்த பெண்

அமெரிக்காவில் தனிமையில் நீச்சலடிக்க விரும்பிய பெண் முதலையிடம் சிக்கி தனது கையை பறிகொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள வெகிவா நதியில் நீச்சலடிப்பதற்காக பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் நீச்சலடித்துக் கொண்டிருந்த தனிமை விரும்பியான இவர். ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது முதலை ஒன்று இவரது கையை கடித்திருக்கிறது. முதலையுடன் நடந்த போராட்டத்தில் தனது கையை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தின்போது மயங்கிய இவரை அந்த வழியாக படகில் சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, இவரது கையை பொருத்தி சீரமைக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லா பிறந்த நாளிலும் புகைப்படம் எடுத்த தந்தைக்கு 27 வயதில் மகன் தந்த பரிசு

இன்றைய காலகட்டத்தில் புகைப்படம் எடுக்க விரும்பாதவர்களை காண்பது அரிதானது.

பெரும்பாலானோர் கையில் இருக்கும் மெபைல் கேமராவில் செல்பி அசத்தி வருகின்றனர்.

அதேபோல் சீனாவில் பீஜீங் நகரில் உள்ள குய்ஸோ பகுதியைச் சேர்ந்த டியான் ஜுன் 1986ம் ஆண்டு தனக்கு குழந்தை பிறந்த போது மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போதிலிருந்து ஒவ்வொரு வருடமும் தனது மகனின் பிறந்த நாளன்று ஒரே விதமான போஸ் கொடுத்து புகைப் படம் எடுத்து வருகி றார். 27 வது பிறந்த நாளில் எடுத்த புகைப் படத்தில் அவரது பேரனும் இணைந்துள் ளார். தற்போது வெளி யாகியுள்ள இந்த புகைப் படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

வீட்டிலிருந்தே விண்வெளிக்கு பேசிய முதியவர்:

ஆச்சரியத்தில் ஆழ்ந்த உலக நாடுகள்

பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் வீட்டிலிருந்து விண்வெளிக்கு பேசிய சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு ஊழியர்களுக்கு இடையில் இருப்பவர்கள் உடனுக்குடன் பேசிக்கொள்ளவே சிரமப்பட்ட காலங்கள் மறைந்து தற்போது இரண்டு கிரகங்களுக்கு இடையில் பேசும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. சாதாரணமாக விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் மட்டுமே தொடர்பு கொண்டு பேச முடியும். சிக்னல் பலமாக இருந்தால் சில அமெச்சூர் ரேடியோ ஆபரோட்டர்களுடனும் பேசலாம்.

ஆனால் தற்போது பிரிட்டனைச் சேர்ந்த அமெச்சூர் ரேடியோ எனப்படும் ஹேம் ரேடியோ ஆபரேட்டராக பணியாற்றும் 52 வயது அட்ரியென் லேன் என்பவர் முதல் முயற்சியிலேயே தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு சாதாரண அறையில் இருந்தவாறு, சாதாரண ரேடியோ ஒலிபரப்பு அலைவரிசை மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்களுடன் பேசி சாதனை படைத்துள்ளார்.

அவரது அழைப்பை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர் கவனித்து அவருக்கு பதிலளித்தார்.

பூமி எப்படி காட்சியளிக்கிறது என லேன் கேள்வியெழுப்பினார். மேலே இருந்து பார்க்கும்போது இடைப்பட்ட பகுதி அனைத்தும் கும்மிருட்டாகவே உள்ளது. பூமிபந்து மட்டும்தான் பலவித வண்ணங்கள் கொண்ட வர்ணஜாலக் கோலமாக இரம்மியமாக தோன்றுகிறது என்று விண்வெளி வீரர் கூறினார். இந்த 50 வினாடி உரையாடல் சர்வதேச அளவில் பெரிய விஷயமாக மாறியிருக்கிறது.

விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் தற்போது எங்கு சுற்றிக் கொண்டுள்ளது. நமது நகரின் மீது, வெகு துல்லியமாக நமது வீட்டின் மேற்பரப்பை எந்த நேரத்தில் கடக்கும். என பலமுறை நன்கு ஆராய்ந்து முறையாக திட்டமிட்டு அவர் செய்த முதல் முயற்சியிலேயே பெரிய வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நமது வீட்டுக்கு மேல் வரும்போது, நம்மாலும் விண்வெளி வீரர்களுடன் பேச முடியுமாம்.

சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிசிபா-2 என்ற புதிய வகை அரிசியை உருவாக்கியுள்ளனர்

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

புவி வெப்பமயமாதலில் கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்த முக்கிய காரணியாக விளங்குவது மீத்தேன் ஆகும்.

அந்த மீத்தேன் நெல் வயல்களில் இருந்து அதிகளவில் வெளியிடப்படுகிறது. மேலும், வளிமண்டலத்தில் இருக்கும் மொத்த மீத்மேன் வாயுவில் 20 சதவீதம் நெல் வயல்களில் மேற்கொள்ளப்படும் நீர் மேலாண்மை, உர பயன்பாடு, உழவு மற்றும் பயிர்கள் ஆகியவற்றில் இருந்து தான் வெளியிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

Google Maps தரும் அதிரடி வசதி

இணைய ஜாம்பவானான கூகுளின் பல்வேறு சேவைகளுள் Google Maps  சேவையும் பிரபல்யமானதாகக் காணப்படுகின்றது.

இச்சேவையினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷனில் காலத்திற்கு காலம் பல்வேறு மாற்றங்களை செய்துவரும் கூகுள் நிறுவனம் தற்போது Night Mode எனும் புதிய வசதியினை உட்புகுத்தியுள்ளது.

முதன் முறையாக iOS சாதனங்களுக்கான அப்பிளிகேஷனில் இந்த வசதி தரப்பட்டுள்ளது.

இவ்வசதியானது இரவு நேரங்களில் இலகுவான முறையிலும், துல்லியமாகவும் Google Maps சேவையைப் பயன்படுத்துவதற்கு உதவுகின்றது.

இவை தவிர இடங்களைப் பெயரிடுதல், தேடல்களுக்கான ஆலோசனைகள், போஸ்ட் செய்யப்பட்ட புகைப்படங்களுக்கான தலைப்புக்களை எடிட் செய்தல் போன்றவற்றுடன் மேலும் சில தவறுகள் நீக்கப்பட்டதாக இப்புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தாய்மார் இல்லாத கிராமம்: சீனாவில் குழந்தைகளின் அவலநிலை

சீனாவில் 6.1 கோடி குழந்தைகள் அனாதைகளாக தவிப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.

மத்திய சீனாவின் ஹனான் மாநிலத்தில் உள்ள ஹ¥யஜிங் கிராம தாய்மார் அற்ற கிராமம் motherless village என்று அழைக்கப்படுகிறது.

ஏனெனில், இந்த கிராமத்தில் பெற்றோர் இல்லாமல் 132 குழந்தைகள் வசிக்கின்றனர். மேலும் அனாதையாக தவிக்கும் இக் குழந்தைகள் மனநிலை பிரச்சினை மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதுதவிர, மறுமணம் செய்துகொள்வதும், பெற்றோர் மரணமடைவதும் காரணமாக கூறப்படுகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.