புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 
ஆஸா நாயும் அவளும்... சிறுகதை

ஆஸா நாயும் அவளும்... சிறுகதை

நூல் : ஆசா நாயும் அவளும்

நூல் வகை : சிறுகதை

நூலாசிரியர் : யோ.புரட்சி

எப்பொழுதும் புதியதாய் புரட் சிகரமாய் சிந்திக்கும் செயற் படும் இளம் படைப்பாளி இவர். பெயருக்கேற்றாற் போலவே படைக் கும் இலக்கியத்திலும் புதுமைகளை சேர்க்கும் இப்படைப்பாளி முல்லைத் தீவு மாவட்டம்;, வள்ளுவர் புரத்தை சேர்ந்தவர். இரு கவிதை நூல்களை வெளியிட்டு மூன்றாவதாக 'ஆஸா நாயும் அவளும்" என்ற சிறுகதை நூலுடன் நம்மை சந்திக்கிறார் கவிஞரும் எழுத்தாளருமான யோ.புரட்சி. பதினொரு தலைப்புக்களுடன் மன தில் பதிவாகிப்போயிடும் கதைக்கரு வினை சுமந்த இச்சிறுகதை நூலினை கையில் எடுத்ததும் பக்கங்களை புரட்ட முடியாது அட்டை படத்தில் விழிகள் நிலைத்து நின்றிடுவதை வாசித்த உள்ளங்கள் உணர்ந்திருக் கக் கூடும். ஆமாம் எளிமையான தும் எழிலானதுமான அப்படம் ஓர் இளம் பெண்ணுடையது. கலாச்சாரத் தினையும் தமிழ் பண்பினையும் அட் டைப்படமாக இனம்காட்டிடும் அழ கான அட்டைப்படம்.

இலண்டன் மற்றும் இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகத்தின் வெளி யீடாக வெளிவந்திருக்கும்; 'ஆசா நாயும் அவளும்" நூலுக்கு வவுனி யு+ர் இரா.உதயணன் அவர்கள் அணிந்துரையினையும் வழமை போல தன் தாயினுடைய வாழ்த்துச்செய் தியும் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து தன் நூலுக்கு தாயிடமே வாழ்த் தினைப் பெறுவதும் ஒரு வித்தியா சமான உணர்வுபு+ர்வமான செயலே. பின்னட்டைக் குறிப்பினை டென் மார்க்கிலிருந்து ரதி மோகன்; வழங்கியிருக்கிறார்.

'காதல் அவசரம்" சிறுகதையில் தொடரும் இத்தொகுப்பு 'ஆசா நாயும் அவளும்' என்ற கதையுடன் முடிவடைகின்றது. முதல் கதையே முத்தாய் வரவேற்கிறது. தற்காலத் துக்கு பொருந்தும் வகையில் எதை யுமே அவசரமாக பார்த்துவிட/ அடைந்துவிட துடிக்கும், இந்த அவ சர உலகம் பின்; மிக குறுகிய காலத்திலேயே எல்லாமே சலித்து விட்ட ஓர் வெறுப்பு, ஏமாற்றத்து டன் காணப்படும் நிலையினை மிக துல்லியமாக ஒரு காதலினூடாக வெளிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் யோ.புரட்சி. இன்றை இளம் சமூ கத்தினருக்கு படிப்பினையாகும் இக்கதையில் பின்வரும் வரிகளை கோடிட்டுக் காட்டலாம். 'எந்த ஆணும் கர்ப்பம் தரிக்கிறது இல்லம்மா. காதலில எல்லை மீறி ஒரு தவறு நடந்துருச்சினா உடல் ரீதியாகவும் சமூகப்பார்வையிலும் நமக்குதாம்மா தண்டனை". கண்ணாடி போன்றது பெண்மை என்பதனை அழகுத்தமி ழில் சொல்லியிருப்பது இளம் பெண் களுக்கான அறிவுறையாகக் கொள் ளலாம்.

வாழ்வில் வெற்றி தோல்வி சக ஜம். ஆனால் எல்லாராலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதனை ஏற்றுக் கொள்ள முடிவதுமில்லை, அதிலிருந்து மீள முடிவதுமில்லை. ஆனால் இதில் மனத்தெளிவு பெறும்போது தொலைக்க இருந்த எத்தனை விடயங்களை பெற்றுவிடுகின்றோம் என்பதனை 'தற்கொலை' எனும் கதை சொல்லிச் செல்லுகிறது என்னதான் காதலினை வார்த்து கதைகளை படைத்திட்ட போதி லும் பெரும்பாலான கதைகளில், எம் தேசத்தின் இறந்த கால நிழல் களையும் இறவாத நிஜங்களை யும் வாரி இறைத்திருப்பதானது வாசிக் கும் நெஞ்சங்;களையும் ஒரு கணம் கசிய வைக்கிறது.

'இரண்டு மொட்டுக்கள் விரிகின் றன" என்ற கதை, ஓயாத 'செல்" மழையில் ஓய்ந்துக் கொண்டிருக் கும் மனித உயிர்களும், மனநிம்மதி களையும் படம் பிடித்து நிற்கிறது. கதையில் நாயகன் நாயகியாக இரு பிஞ்சுகள் கண்ணாவும் அவன் தங்கை நிரோசாவும். பாவம் எது, பிழையெது என அறியாத மழலை களுக்கு ஏன் இந்த தண்டனை? ஒரு பானைச்சோற்றுப் பதமாய் இந்த கதை அமைந்திருந்தாலும் அந்த நாட்களின் வேதனைகளை வாசகர்களாகிய எமக்கும் உணர்ந் தனுபவிக்க முடிகிறது.

இலகுவான நடையோட்டம் இடை யிடையே நகைச்சுவையென அப் பப்போ உதடுகள் புன்னகைக்கவும் மறக்கவில்லை. எடுத்த புத்தகத் தினை வாசித்து முடிக்காமல் வைத் துதிட்டு எழும்பவிடாத கலை இந்த எழுத்தாளருக்கு அதிகமாகவே உண்டு. வாழ்த்துக்கள்! 'பார்வைபெறும் விழியாள்" தலைப்பில் உணர்வு பு+ர்வமான காதல் கதை. 'இணை யாத கோடுகள்" எனும் கதையும் இதே பொருளில் இணைந்துக் கொள்கிறது. தற்காலத்தில் எதிர்ப்பார்ப் புக்கள் நிறைந்த காதல் சம்மந்தங்களுக்கு சவாலாக அமைந்த கருப்பொருள் மிகவும் ரசிக்க வைக்கிறது. 'இதுவும் வேலை தான்" கதை இன்றைய வேலைத்தேடும் இளைஞர்களின் உள்ளக்குமுறல். தகுதிக்கு ஏற்ப தொழில் கிடைக்காத சந்தர்ப்பங்களில் தொழிலுக் கேற்ப எம்மை மாற்றிக்கொள்ளும் படிப்பினையைதான் சொல் லுகிறது. பெண்களின் இதயம் கடலைவிட ஆழமானது. அதனை எவராலும் இலகுவில் அறிந்துக் கொள்ள முடியா தென்று காலங்காலமாக கூறி வருகின்றார்கள். ஆனால் எழுத்தாளர் யோ.புரட்சி அவர்களின் கதைகளில் இந்த 'கூற்று" உண்மையா பொய்யா என ஆராயுமளவுக்கு மிக லாவகமாக பெண்களின் மனதை படம் பிடித்து காட்டியுள் ளார். மறைந்து கிடக்கும் பெண்ணின் மனவோட்டயங்களை 'ஆகஸ்ட் 25" என்ற கதையிலும் காணலாம். இதுவும் ஒரு சுவாரஸ்யமான காதல் கதைதான்.

எட்டிப்பார்க்கும் எதிர்ப்பார்ப்பினை உடைத்துவிட்டு புதிய விடயத்தை படைத்திருப்பது இப்படைப்பாளியின் வெற்றி யாக காணப்படுகின்றது.

போர்க்காலங்களில் எத்தனையெத்தனை புதிய வாழ்க் கைகள் புதையுண்டு போனதென்பதற்கு சிறப்பான ஒரு சான்று. கதையின் தலைப்பே கண்ணீராய் முடியும் விதம், சிலிர்க்க வைக்கிறது. கதைகளில் ஆங்காங்கே நகைச் சுவை கலந்திருப்பதைப் போல நல்ல தத்துவார்த்த வரிக ளும் இயல்பான நடையோட்டமும், எளிமையான வார்த் தைப் பிரயோகமும் நூலினை இன்னும் கனமடைய செய் திருக்கின்றது. உதாரணமாக இதனை கூறலாம். 'ஒரு மனி தன் இந்த இடத்தில் இப்படித்தான் சாவு என்பதை யார் தீர்மானிக்கின்றாறோ? அதை எப்போது விஞ்ஞானம் கண்டு பிடிக்குமோ? அப்போது மட்டுமே விஞ்ஞானம் உலகை வென்றுவிட்டதாக அர்த்தம். இல்லாவிட்டால் அல்லும் பகலும் அகிம்சைக்குள் கிடந்த காந்தி துப்பாக்கிச் சன்னம் பட்டு குருதி சிந்தி உயிரிழந்திருப்பாரா? என்பது போல இன்னும் பல....

வெறுமனே பொழுது போக்குக்காயல்லாமல், வாழ்க்கை யியலின் பல வடிவங்களை தன் கதைகளின் மூலம் வெளிப்படுத்தி வெற்றி கண்டுள் ளார் யோ.புரட்சி நூல் வெளி யீட்டிலும் கூட புதுமை களை புகுத்தி வரும் இவர் தனது கவிதை நூலினை கடலிலும், சிறுகதை நூலினை காட்டிலும் வெளியிட்டு எம் மையும் பல வித்தியாசமான அனுபவத்தினை பெற்றுக் கொள்ள உதவி செய்திருக்கிறார்.

 

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.