புத் 67 இல. 33

மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01

SUNDAY AUGUST 16 2015

 

 
யுத்த விதவைகளின் இதயத்தை உருக்கும் கதைகள்

யுத்த விதவைகளின் இதயத்தை உருக்கும் கதைகள்

இந்த வாரம் கொண்டாடப்பட்ட யுத்த விதவைகள் தினம், 100,000 யுத்த விதவைகள் உள்ள ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாளா கும். அதில் பெரும்பான்மையானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்தவர்களாக இருக்கும் அதேவேளை, இந்த வார சக்தி குரோனிக்கல்ஸ் இரண்டு யுத்த விதவைகளின் கதைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர உள்ளது. அதில் ஒருவர் வடக் கையும் மற்றவர் தெற்கையும் சேர்ந்தவர்கள். இந்தப் பெண்கள் யுத்தத்தைக் காட்டிலும் யுத்தமும் முடிவடைந்த பின் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு பெரும் சவால்களைச் சமாளிக்க வேண்டியுள்ளது என்பதைக் காட்டுகிறார்கள். இவைகள் தான் கைவிடப் பட்ட நிலையில் உள்ள அந்தப் பெண் களின் கதைகள்.

இரண்டு பெண்கள். இரண்டு விதவை கள், சுதர்மா மற்றும் செல்வமலர் மூன்று தசாப்த மோதல்களின் கூட்டுச் சேதம்.

அறையில் இரண்டு பக்கத்திலும் தலையில் ஒலி வாங்கிகளை மாட்டிய வாறே ஏராளமான பெண்கள் அமர்ந்துள் ளார்கள். மொழி பெயர்ப்பாளர்கள் சிங் களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளின் இடையே மாறிக் கொண் டிருக்கிறார்கள். அந்தப் பெண்கள் மற் றவர்களின் வலிகளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக உள்ளார்கள். இது வலிமை யான பெண்களின் குரல்கள் என்பதற்காக அமைக்கப்பட்ட மேடை, ஸ்ரீ லங்கா தேசிய கிறிஸ்தவ இவான்ஜலிகல் முன் னணி மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை (ஆர். எஸ். ஏ) என்பனவற்றில் கூட்டு முயற்சியாக மோதலின் இரண்டு முனை களிலும் இருந்து இந்தப் பெண்கள் ஒன்றாகக் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த சுதர்மா ஹெட்டியாரச்சி மேடைக்கு முதலில் வந்தார். நாட்டில் 100,000 யுத்த விதவைகள் உள்ளதாக எனக்குச் சொல்லப்பட்டது. நானும் அந்தப் பெண்களில் ஒருத்தி. என்னுடைய கதையும் அவர்களுடைய கதையை ஒத்ததுதான், விபரங்களைச் சொல்வது வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் கதை ஒன்றுதான் என்று அவர் தெரிவித்தார். அவரது கணவன் ஒரு படை வீரர். 2000ம் ஆண்டில் யுத்தத்தில் கொல் லப்பட்டார். அந்த நேரம் அவருக்கும் ஏழு வயது மற்றும் மூன்று வயது பிராய முடைய இரண்டு மகன்கள் இருந்தார்கள். மற்றும் அவர் மூன்று மாத கர்ப்பிணி யாகவும் இருந்தார். சீருடை தரித்திருத்த சுதர்மாவின் கணவனின் உடல் அவனது பெற்றோரின் வீட்டில் கிடத்தப்பட்டிருந்தது. தனது வயிற்றில் இருக்கும் மூன்றாவது குழந்தையை கருக்கலைப்புச் செய்யும்படி கணவரின் உடன் பிறப்புகள் தன்னிடம் எப்படியெல்லாம் கேட்டுப் பார்த்தார்கள் என்பதை சுதர்மா நினைவு கூர்ந்தார்.

கருக்கலைப்பு

நான் அவர்களது வீட்டில் தங்கியிருந் தால் அது அவர்களுக்கு பெரிய சுமை யாக இருக்கும் என்று அவர்கள் சொன் னார்கள். எனது கருப்பையில் வளரும் கருவை கலைத்து விடும்படி எனக்கு அறிவுரை சொன்னார்கள். அப்போது நான் எனது மூட்டை முடிச்சுகளை எடுத் துக் கொண்டு எனது பிள்ளைகளுடன் சிறிய ஒரு வீட்டுக்கு இடம் பெயர்ந்தேன். அந்த வீட்டுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி எதுவும் இருக்கவில்லை. இது 15 வருடங்களுக்கு முன்பு நடந்தது.

வீடு ஒன்று இல்லாமல் இரண்டு சிறிய மகன் மாரையும் மற்றும் கைக்குழந்தையை யும் வளர்ப்பது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல என்பதைச் சுதர்மா விரைவிலேயே உணர்ந்தார். அவர் தனது கணவரின் படைப் பிரிவினை அணுகி ஆர். எஸ். ஏ.யிடமி ருந்து தனக்கு ஒரு வீடு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். கல்னேவாவில் உள்ள யுத்த வீரர்கள் கிராமத்தில் சுதர் மாவுக்கு ஒரு வீடு வழங்கப்பட்டது. யுத்த விதவைகள் மற்றும் அவர்களது பிள்ளைகள் மத்தியில் காணப்படும் உளவியல் வேதனை அசாதாரணமானது அல்ல ஆனால் அதைப்பற்றி அரிதாகவே பேசப்பட்டது. நாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிந் திருந்த எனது மூத்த மகன் கடும் விரக் தியில் இருந்தான். அவனது வாழ்க்கையை மீண்டும் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு நான் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது என்று சுதர்மா சொன்னார். இன்று அவரது மூத்த மகன் மாலை தீவில் உள்ள விருந்தோம்பல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து மாதம் 100,000 ரூபாவை சம்பளமாகப் பெறுகிறார். அவரது இரண் டாவது மகன் இந்த மாதம் நடைபெறுகிற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்று கிறான். மூன்றாவது மகன் அடுத்த வருடம் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்கு ஆங்கில மொழி மூலம் தோற்றுவதற்கு உள்ளார்.

சவால்கள்

விதவைகள் ஆகிய நாங்கள் தினசரி அநேக சவால்களை எதிர்கொள்ள வேண் டியுள்ளது. எங்களுக்கு சம்பளப் படிகள் கிடைக்கின்றன. ஆனால் தினசரி நாங்கள் அனுபவிக்கும் தனிமை மற்றும் வெற்றி டத்தை அவை நிரப்பி விடாது. இராணு வம் மற்றும் ஆர்.எஸ்.ஏ என்பன எங்க ளுக்கு படை வீரரின் உயிரைத் தவிர மற்ற அனைத்தையும் வழங்குகிறார்கள் என்று சுதர்மா சொன்னார். எல்லா பெற் றோரையும் மற்றும் குறிப்பாக ஒற்றைப் பெற்றோரை அதிகம் வாட்டும் ஒரு பொதுவான துயரம், ஒருக்கால் அவர்களது பிள்ளைகள் அவர்களை விட்டுப் பிரிந் தால் என்ன நடக்குமோ என்பதுதான். சுதர்மா மற்றும் அவரது வீட்டுத் திட்டத்தில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து பிற்காலத் தில் தங்களுக்கு உதவும் என்கிற நம் பிக்கையில் மூலிகைச் செடிகளை வளர்க் கும் ஒரு சிறிய வியாபாரத்தை ஆரம்பித் துள்ளார்கள்.

ஒரு படை வீரர் 55 வயதை அடைந்த தும் ஓய்வு பெறுகிறார். மற்றும் அவர் ஓய்வூதியத்துக்கு உரித்துடையவர் ஆகிறார். அவர் மரணமடைந்தால் அவரது மனைவி அந்த ஓய்வூதியத்தை பெறுகிறார். தனக்கு ஓய்வூதியத்தை பெறுவதற்கு 12 வருடங்கள் பிடித்தது என்று சுதர்மா சொன்னார். பிள்ளைகள் தங்கள் உயர் கல்வியை மேற்கொண்டுள்ளபோது மற்றும் பாடசாலை யின் இறுதிக் கட்டத்தில் உள்ள ஒரு சமயத் தில் சம்பளம் வழங்குவது நிறுத்தப்படு கிறது. அந்தச் சமயத்தில் ஏற்படும் பணப் பற்றாக்குறை பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது என்று அவர் சொன்னார்.

துயரமான நிலை

குடும்பம் போற்றும் ஒரே தலைவர் யுத்தத்தில் இறந்துவிட்டால் பிள்ளைகள் ஒரு துயரமான நிலைக்குத் தள்ளப்படு கிறார்கள். அத்தகைய ஒரு இக்கட்டான நிலையில் எத்தனை பிள்ளைகள் உள்ளார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சில பிள்ளைகள் தங்கள் தந்தையை ஒருபோதும் பார்த்தது கிடையாது. எனினும் தங்களுக்கு தந்தை முக்கியம் என்பதை அவர்கள் அறிவார்கள். நான் எனது கணவரின் கல்லறைக்குச் செல்லும் போதெல்லாம் எனது கடைசி மகன் அந்த இடத்திலிருந்து ஞாபகார்த்தமாக ஒரு கல்லை எடுத்துவர மறப்பதில்லை என்று சுதர்மா சொன்னார்.

ஆர். எஸ். ஏ யின் உதவித் தலைவியான உபாலங்கனி மல்கமுவ, தங்களது அமைப்பு 29,933 யுத்த வீரர்களுக்கு நிவாரணம் வழங்கி வருவதாகவும், அதில் 9,684 பேர் திருமணமானவர்கள். மேலதிகமாக 10,572 உடல் ஊனமுற்ற படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கூட நலன்புரி சேவைகளுக்காக ஆர். எஸ். ஏ. யில் தங்கியுள்ளன எனத் தெரிவித்தார்.

சுதர்மாவை போல செல்வமலர் சம்பளப் படியையோ அல்லது வீட்டு வசதியையோ அரசாங்கத்திடம் இருந்து பெறவில்லை. அவரது கணவர் அவர்கள் தங்கியிருந்த உள்ளக இடம் பெயர்ந்தோர் முகாமில் இருந்து வெறுமனே காணாமற்போனார் மற்றும் ஒருபோதும் திரும்பி வரவில்லை. ஆறு வருடங்கள் கடந்த போதும் கூட அவருக்கு என்ன நடந்தது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.

தனது கதையை சொல்வதற்காக மேடைக்கு வந்த செல்வமலர் எங்களைவிட எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என நாங்கள் நம்பியிருந்தோம் எனச் சொன்னார்.

திருமணம்

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என அவர் இரண்டு பிள்ளைகளுக்குத் தாய். போரின் இறுதிக் கட்டத்தின்போது எனது மகளுக்கு 16 வயது. அந்த வயதுள்ள ஒரு பிள்ளையை பாதுகாப்பது மிகவும் கடினம். நான் எல்.ரீ.ரீ.ஈ இடம் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதாகச் சொன்னதுடன் மற்றும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு குடும்பத்துடன் தப்பி வந்தோம். நாங்கள் இராணுவத்திடம் சரணடைந்த பின்னரும் அவளை நான் இராணுவத்திடம் இருந்தும் கூட பாதுகாக்க வேண்டியிருந்தது. நான் 17 வயதில் திருமணம் செய்தேன். எனவே எனது மகளை 18 வயதில் திருமணம் செய்து கொடுத்தேன் என அவர் சொன்னார்.

செல்வமலரின் கவனம் விரைவிலேயே தனது மகன் மற்றும் அவனது படிப்பில் செலுத்தப்பட்டது. ஆனால் அவர் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்ததுமே ஒரு போதகராக மாறிவிட்டார்.

தான் ஒரு போதகராக மாறப் போவதாக எடுத்துள்ள முடிவை அவன் என்னிடம் அறிவித்தபோது நான் இடிந்து போனேன். நீ சொல்கிறாய் கடவுளுக்குச் சேவை செய்யப் போகிறேன் என்று, ஆனால் நான் உன் தாய், எனக்கு உதவி செய்ய யாருமில்லை. நான் தனிமையில் உள்ளேன். நீ உன் தாயை கவனிக்க மாட்டாயா என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் நான் கடவுளுக்கு சேவை செய்யும்போது அவர் உங்களுக்கு உங்கள் பயணத்தில் துணை வருவார், நீங்கள் தனியாக மாட்டீர்கள் என்று சொல்லிவிட்டான்.

அதன் பின் விரைவிலேயே செல்வமலர், மீள்குடியேறிய மற்றவர்களுடன் சேர்ந்து புதுக்குடியிருப்பில் உள்ள அவரது சொந்த இடத்துக்கு திரும்பினார். உள்ளக இடம் பெயர்ந்த முகாமில் இருந்து திரும்பிய மற்றவர்களைப் போலவே வாழ்வதற்கு ஒரு வீடு இல்லாமலிருப்பதை செல்வமலர் கண்டார். அவரது குடியிருப்பை காடு சூழ்ந்திருந்தது.

சிறிய வியாபாரம்

நான் எனது சொந்த முயற்சியிலேயே எனது வாழ்க்கையை திரும்பவும் ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இருந் தேன். ஒரு ஆணின் துணை இல்லாமலே என்னால் சொந்தமாக வாழ முடியும் என்று நான் எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். சிறு பலகாரம் மற்றும் வேறு உணவுப் பண்டங்களை தயாரிக் கும் ஒரு சிறிய வியாபாரத்தை நான் ஆரம்பித்தேன். வீட்டுக்கு வீடு நடந்து சென்று நான் உணவுப் பண்டங்களை விற்று வந்தேன். இறுதியாக நான் ஒரு மிதி வண்டி வாங்குவதற்கு தேவையான பணத்தை சேமித்தேன். இன்று நான் எனது உந்துருளியை பயன்படுத்தி வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்ப துடன், வேறு ஆறு பெண்களையும் எனது வியாபாரத்தில் வேலைக்கு அமர்த் தியுள்ளேன் என்று செல்வமலர் தெரி வித்தார்.

இத்தனை வருடங்களில் அவர் சாதித்துள்ள மிகப் பெரிய சாதனை அவர் பெற்ற சுய நம்பிக்கையும் மற்றும் சுதந்திரமும் ஆகும். தன்னைப் போன்ற சூழ்நிலையை சந்திக்கும் ஏனைய பெண் களுக்கு தான் ஒரு உதாரணமாக இருக்க விரும்புவதாக செல்வமலர் தெரிவித்தார். கடந்த வாரம் ஒரு யுவதி என்னிடம் உதவி கேட்டு வந்தாள். அவள் ஒரு அனாதை. அவளது தாய் மத்திய கிழக் கில் வேலை செய்யும்போது இறந்து விட்டாள். ஒரு நாள் தானும் ஒரு பெண் தொழிலதிபராக மாறவேன் என்று அவள் என்னிடம் சொன்னாள். அவளுக்கு 22 வயது மட்டுமே. நானும் ஒரு காலத்தில் அவளது நிலையில்தான் இருந்தேன். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சிலருக்கு நான் ஊக்குவிப்பாக இருக்க இயலும் என் பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று செல்வமலர் சொன்னார்.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வித வைகள் எதிர்நோக்கும் பிரதான தடை களுக்கு வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதே காரணம் என அவர் சொன்னார். போர் முடிவடைந் ததும், பீரங்கித் தாக்குதல்களால் கொல் லப்படுவோம் என்கிற பயத்தை, பசி, பட்டினி மற்றும் வறுமை என்கிற பயம் இடமாற்றிக் கொண்டது. பெண்களை கொழும்பில் வீட்டு வேலை செய்வதற்காக மயக்கி இழுத்தார்கள். ஆனால் மற்றவர்க ளுக்கு அடிமையாகாதீர்கள் என நான் அந்தப் பெண்களிடம் சொன்னேன். விற்பனை செய்வதற்காக சில உணவுப் பண்டங்களை தயாரிப்பதற்காக உங்கள் சமையலறைகளைப் பயன்படுத்தி சுதந்தி ரமாக இருங்கள். நாங்கள் எங்களை ஒருபோதும் அடிமையாக்கிக் கொள்ளக் கூடாது. எல்லாவற்றையும் அறிந்து கொண்டுதான் ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுவதில்லை. அனுபவத்தின் மூலமே நீங்கள் கற்றுக் கொள்கிaர்கள் என செல்வமலர் மேலும் தெரிவித்தார்.

ஐந்து சகோதரிகள்

செல்வமலரின் ஐந்து சகோதரிகளுமே தொழிலதிபர்கள்தான். அவரது சகோதரிக ளில் ஒருவர் தானே சொந்தமாக காய்கறி பப்படம் தயாரிக்கிறார்கள். அவர் அதை ஜனாதிபதிக்கு கூட கொடுத்துள்ளார் என செல்வமலர் சொன்னார். அவரது சகோதரி பொருட்களை விநியோகிக்க தானே முச்சக்கரவண்டியை ஓட்டிச் செல்கிறார். அவரது தாய் சாவகச்சேரி சந்தையில் ஒரு கடை வைத்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யசிங்கம் இந்த யுத்த விதவை களின் பிரச்சினையை பற்றி நன்கு அறிந்துள்ளதால் இந்த விடயம் பற்றி பிர தமர் அமைத்துள்ள ஆணைக்குழுவிற்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

90 விகிதமான யுத்த விதவைகள் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். வடக்கில் மட்டும் சுமார் 60,000 பெண்கள் வீட்டுத் தலைவர்களாக உள்ளார்கள் என அபிமன்யசிங்கம் தெரிவித்தார். பெருமளவான பெண்கள் விதவைகளானது அவர்களது கணவர்கள் யுத்தம் நடைபெற்ற சமயம் கொல்லப் பட்டதினாலேயே இறுதிக்கட்ட ‘போரின் போது கிட்டத்தட்ட 20,000 முதல் 40,000 வரையான ஆண்கள் கொல்லப்பட்ட தாக நம்பப்படுகிறது. அவரது ஆய்விலி ருந்து வீட்டுவசதி மற்றும் வருமானம் என்பனவற்றின் பற்றாக்குறையே இந்த விதவைகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை என அபிமன்யசிங்கம் அவதானித்துள்ளார்.

பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் சிறிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற் காக ரூபா 25,000 முதல் ரூபா 40,000 வரை வழங்குகின்றன. ஆனால் பெரும் பாலான சந்தர்ப்பங்களில் இந்த தொகை போதுமானதாக இல்லாததால் இந்தப் பெண்கள் கடன்களை வாங்கி அநியாய வட்டி செலுத்துகின்றனர். சிலநேரங்களில் பலர் கால்நடை வளர்ப்பு திட்டத்தை ஊக்குவிக்கின்றனர் ஆனால் அவைகள் நிலையானவையாக இருப்பதில்லை. கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும்போது பெண் கள் கடன் வாங்கி கூடுகளைக் கட்டு வதுடன் மற்றும் குஞ்சுகளையும் வாங்கு கிறார்கள். மழை காலங்களில் நோய்கள் பரவி எல்லா குஞ்சுகளையும் கொன்று விடுகிறது. பெண்கள் திவாலாகும் நிலைக்கு ஆளாவதுடன் கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்த கஷ்டப்படுகிறார்கள். இன்னும் சிலர் மாடு மேய்ச்சலை ஊக்குவிக்கிறார்கள் ஆனால் சில குறிப்பிட்ட இடங்களில் சிறிய அளவு புற்களே காணப்படுகின்றன என அபிமன்யசிங்கம் தெரிவித்தார்.

சில பெண்கள் தங்கள் நிலங்கள் இன்னும் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள். பெரும்பாலான நீர்ப்பாசன வாய்க்கால்கள் இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களினூடாகவே செல்வதால் விவசாயத்துக்கு வேண்டிய நீரைப் பெறுவது கடினமாக உள்ளது.

யுத்த விதவைகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக ஒரு கொள்கையை உருவாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பெண்களை தலைமையிலான குடும்பங்களை அதிகாரிகள் ஒன்பது குழுக்களாக வகைப்படுத்தி உள்ளார்கள். அவையான, கணவன் இயற்கை மரணமடைந்த வீட்டுத் தலைவி, கணவன் கொல்லப்பட்ட விட்டுத் தலைவி, கணவன் ஒரு வருமானத்தை பெறமுடியாத நிலையிலுள்ள குடும்பங்கள், குடும்பம் போற்றும் பிரதான ஆண் காணாமற் போயிருத்தல், குடும்பம் போற்றும் பிரதான ஆண், இராணுவம் அல்லது காவல்துறையினால் கைது செய்யப்பட்டிருத்தல், கணவன் குடும்பத்தை கைவிட்டுச் சென்றிருத்தல், கற்பழிப்பு அல்லது பாலியல் குற்றங்கள் காரணமாக ஒரு பிள்ளைக்குத் தாயாகி இருத்தல் அல்லது கணவன் உடல் ரீதியாக ஊனமுற்றிருத்தல் என்பனவாகும்.

தீர்வு

அபிமன்யசிங்கத்தின் முன்பாக உள்ள பணி மகத்தானது மற்றும் இதற்கு தீர்வுதான் என்ன என்று அவரிடம் வினவியபோது, பிரச்சினைகள் அநேகமானதும் மற்றும் வித்தியாசமானதுமாக உள்ளன. எல்லாவற்றையும் சரியாக்கக் கூடிய ஒற்றைத் தீர்வு எங்களிடம் இல்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வை கண்டுபிடிப்பதற்கு இந்தப் பிரச்சினைகள் இன்னும் ஒரு தசாப்தம் வரை தொடரும் என அவர் பதிலளித்தார். சுதர்மா மற்றும் செல்வமலர் ஆகியோரின் கதை முடியும்போது, இரண்டு பக்கத்திலும் இருந்த பெண்கள் தாங்கள் செவியில் பொருத்தியிருந்த ஒலி வாங்கியை அகற்றி விட்டு தங்கள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தார்கள். மோதலின் இருபுறமும் உள்ள வலிகள் ஒரே மாதிரியானவை என்பதை புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளரின் உதவி தேவைப்படவில்லை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.