புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 

வீட்டுத்தோட்டம், பண்ணைகளுக்கேற்ற பிளாஸ்டிக் தொழில்நுட்பம்

வீட்டுத்தோட்டம், பண்ணைகளுக்கேற்ற பிளாஸ்டிக் தொழில்நுட்பம்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடை பெற்ற ‘ஸ்ரீலங்கா பிளாஸ்ட்’ கண்காட்சியில், இந்தியாவின் ‘லைப்லைன் டெக்னெலொஜி’ நிறுவனத்தின் உயரதிகாரியான திரு. ராஜன் அவர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.

லைப் லைன் டெக்னொலொஜி நிறுவனமானது பிளாஸ்டிக் சேர்மானம் மற்றும் விவசாயத்திற்கான உள்வாங்கிகள் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் இந்தியாவில் ஒரு முன்னோடி நிறுவனமாகத் திகழ்கின்றது.

இந் நிறுவனத்தின் இயற்கை ரீதியான, நச்சுத்தன்மையற்ற, விலை குறைவான சேதனப் பண்ணைக்குரிய உற்பத்திகள் சர்வதேச தரம் வாய்ந்தவை. இச் சந்திப்பின் போது, திரு.ராஜன், நனோ சில்வர் அடிப்படையில் தயாரான மெல்லிய பிளாஸ்டிக் தாள்களைக் காண்பித்தார். இவை கனிகளில் எதலீனைக் கட்டுப்படுத்துவதன் மூலம், கனிகள் அழுகிப் பழுதடைதல், மற்றும் பக்டீரியா, பூஞ்சணம், அல்கா மூலமான தொற்றுகளைத் தடுக்கிறது.

இந் நிறுவனத்தின் ஒரு நுண் போஷாக்கு உற்பத்தி, மலர்கள் வாடாமல், நிறம் மாறாமல், வாசனையுடன் அதிக நாட்கள் இருக்க உதவுகிறது. இந்நிறுவனத்தின் தேயிலைச் செய்கைக்கான சில தயாரிப்புகள், தேயிலையில் பச்சையத்தையும், கொழுந்து உற்பத்தியையும் அதிகரிப்பதுடன், கிருமி நாசினியாகவும், வரட்சியைத் தாக்குப் பிடிக்கவும் உதவுகின்றன.

தேயிலை உற்பத்தியை 20 சதவீதம் வரை அதிகரிப்பது மட்டுமல்லாமல், செடிகளின் வாழ்நாளையும் அதிகரிக்கின்றன. இதன் மூலம் தோட்டங்கள் அதிக லாபத்தை ஈட்ட வாய்ப்பளிக்கின்றன.

மேலும், விவசாயிகளின் மேம்பாட் டிற்காக உழைக்கும் சமூக சேவை நிறுவனங்களுக்குத் தமது நிறுவனத்தின் உற்பத்திகளை இனாமாகத் தந்து உதவுவதற்கும் ராஜன் முன்வந்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.